சாம்பியன்ஸ் டிராபியில் பாகிஸ்தான் அணி ஒரு போட்டியில் கூட வெற்றி பெறாமல் வெளியேறி உள்ளது. இருந்தாலும், ஐசிசியில் இருந்து பாகிஸ்தான் அணிக்கு கோடிக்கணக்கில் பரிசு கிடைத்துள்ளது.

Champions Trophy 2025: ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பாகிஸ்தான் அணி ஒரு போட்டியில் கூட வெற்றி பெறாமல் வெளியேறியது மூலம் அந்நாட்டு ரசிகர்கள் கடுமையான அதிருப்தி அடைந்துள்ளனர். தொடரின் நடப்பு சாம்பியனாக களமிறங்கிய முகமது ரிஸ்வான் தலைமையிலான பாகிஸ்தான் அணி 'ஏ' குரூப்பில் கடைசி இடம் பிடித்து தனது பயணத்தை முடித்துக் கொண்டுள்ளது. 

இன்னும் ஒரு போட்டியில் கூட வெற்றி பெறாத தன்னோட போராட்டத்தை முடித்துக் கொண்ட பாகிஸ்தான் அணிக்கு ஐசிசியில் இருந்து பரிசு ரூபத்தில் பண மழை கொட்டி உள்ளது. புள்ளிகள் பட்டியலில் கடைசி இடம் பிடித்திருந்தாலும் பாகிஸ்தான் அணிக்கு ஐசிசியில் கிடைத்த பரிசு பணம் எவ்வளவு என தெரிந்து கொள்ளலாம்.

பாகிஸ்தானுக்கு வந்த கோடிக்கணக்கான பணம்:

முகமது ரிஸ்வான் தலைமையிலான பாகிஸ்தான் அணி முதல் போட்டியில் நியூசிலாந்திடம் தோல்வியைத் தழுவியது. அதன் பின்னர் துபாயில் நடைபெற்ற ஹைவோல்டேஜ் மேட்ச்சில் இந்தியாவுக்கு எதிராக தடுமாறி விழுந்தது. இன்னும் இது பத்தாதுன்னு வங்கதேசத்திற்கு எதிரான போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டது. இதனால் மொத்தம் 8 அணிகள் கலந்து கொண்ட இந்த ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பாகிஸ்தான் அணி 7 அல்லது 8வது இடம் பிடிக்கும். இதனால் கடைசி இடம் பிடிக்கிற அணிக்கு ஐசிசி 1.40 லட்சம் டாலர் கூடவே உறுதியான பணம் 1.25 லட்சம் டாலர் தொகைய பாகிஸ்தான் அணி பெறுகிறது. இதனால் மொத்தமாக பாகிஸ்தான் அணிக்கு 2.65 லட்சம் டாலர் பரிசு அதாவது இந்திய ரூபாயில் கணக்கு பார்த்தால் 2.31 கோடி ரூபாய் பரிசு பாகிஸ்தானுக்கு கிடைக்கும்.

Scroll to load tweet…

சாம்பியன்ஸ் டிராபியில் பரிசு எப்படி பிரிச்சு வழங்கப்படுகிறது?

சாம்பியன் அணிக்கு: 19.46 கோடி ரூபாய்
ரன்னர் அப் அணிக்கு: 9.73 கோடி ரூபாய்
செமிஃபைனல் அணிகளுக்கு தலா: 4.86 கோடி ரூபாய்
5&6வது இடம் பிடிக்கின்ற அணிகளுக்கு: 3.04 கோடி ரூபாய்
7&8வது இடம் புடிக்கிற அணிகளுக்கு: 1.22 கோடி ரூபாய்
குரூப் ஸ்டேஜில் ஒவ்வொரு வெற்றிக்கும்: 1.22 கோடி ரூபாய்
கியாரண்டி தொகை: 1.09 கோடி ரூபாய் வழங்கப்படுகிறது.

இதுவரை 2025 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி அப்டேட் என்ன?

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரின் 'ஏ' குரூப் போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் 2 போட்டிகளில் வென்றுள்ளன. இன்னும் ஒரு போட்டி இருக்கும் நிலையிலேயே அரையிறுதிக்கான இடத்தை உறுதி செய்துவிட்டது. இன்னும் இந்த குரூப்பில் 2 போட்டிகளில் தோற்று, ஒரு போட்டி ரத்தானதால் தலா ஒரு ஒரு மார்க் எடுத்த பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் அணி அதிகாரப்பூர்வமாக அரையிறுதிக்கான வாய்ப்பில் இருந்து வெளியேறி விட்டது.

இன்னொரு பக்கம் 'பி' குரூப்பில் ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணி தொடர்ந்து 2 போட்டிகளில் தோற்று சாம்பியன்ஸ் டிராபி அரையிறுதி வாய்ப்பில் இருந்து வெளியேறிவிட்டது. இன்னொரு பக்கம் இருக்குற 2 இடத்துக்காக ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான் மற்றும் தென்னாப்பிரிக்கா இடையே போட்டி நிலவுகிறது. ஆஸ்திரேலியா மற்றும் ஆப்கானிஸ்தான் இடையேயான போட்டி ஒரு விதத்தில் நாக்அவுட் மேட்ச்னு சொல்லலாம். வெற்றி பெறும் அணி அரையிறுதிக்குள் நுழையும். தோல்வி அடையும் அணி தொடரில் இருந்து வெளியேறும்.