Asianet News TamilAsianet News Tamil

#WIvsPAK 40 வயசுலயும் முகமது ஹஃபீஸின் டாப் க்ளாஸ் பவுலிங்! விறுவிறுப்பான போட்டியின் கடைசி ஓவரில் பாக்., வெற்றி

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான 2வது டி20 போட்டியில் பாகிஸ்தான் அணி 7 ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.
 

pakistan beat west indies in second t20 with the help of mohammad hafeez amazing bowling spell
Author
Guyana, First Published Aug 1, 2021, 2:44 PM IST

பாகிஸ்தான் அணி வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்து ஆடிவருகிறது. 4 டி20 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டி முடிவில்லாமல் முடிந்தது. 2வது போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.

இதையடுத்து முதலில் பேட்டிங் ஆடிய பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் அதிரடியாக ஆடி அரைசதம் அடித்தார். பாபர் அசாம் அதிகபட்சமாக 51 ரன்கள் அடித்தார். தொடக்க வீரர் முகமது ரிஸ்வானும் நன்றாக ஆடி 46 ரன்கள் அடித்தார். மற்றொரு தொடக்க வீரரான ஷர்ஜீல் கான் 20 ரன்கள் மட்டுமே அடித்தார். பாபர் அசாமுக்கு அடுத்து 4ம் வரிசையில் இறங்கிய ஃபகர் ஜமான், 15 ரன்கள் அடித்தார். அதன்பின்னர் களமிறங்கிய அனைவருமே படுமோசமாக பேட்டிங் ஆடி ஒற்றை இலக்கத்தில் வெளியேற, 20 ஓவரில் பாகிஸ்தான் அணி 157 ரன்கள் மட்டுமே அடித்தது.

158 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய வெஸ்ட் இண்டீஸ் அணியில் தொடக்க வீரர் ஃப்ளெட்சர் டக் அவுட்டானார். மற்றொரு தொடக்க வீரரான எவின் லூயிஸ் 35 ரன்கள் அடித்தார். கிறிஸ் கெய்ல் 16 ரன்களும், ஹெட்மயர் 17 ரன்களும் அடித்து ஏமாற்றமளித்தனர். நிகோலஸ் பூரன் அதிரடியாக ஆடி பவுண்டரியும் சிக்ஸருமாக விளாசி நம்பிக்கையளித்தார். 

அதிரடியாக ஆடிய பூரன் அரைசதம் அடித்தார். பொல்லார்டு மந்தமாக பேட்டிங் ஆடினார். ஆனால் பூரனின் அதிரடியால் இலக்கை நெருங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு கடைசி ஓவரில் வெற்றிக்கு 20 ரன்கள் தேவைப்பட்டது. கடைசி ஓவரில் பொல்லார்டு ஆட்டமிழக்க, பூரனும் 3 மற்றும் 4வது பந்தில் ரன்னே அடிக்காமல் இருக்க, பாகிஸ்தானின் வெற்றி உறுதியானது. 

ஆனால் கடைசி 2 பந்தில் பவுண்டரியும் சிக்ஸரும் அடித்தார். 20 ஓவரில் 150 ரன்கள் அடித்த வெஸ்ட் இண்டீஸ் அணி 7 ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. அபாரமாக ஆடிய பூரன், 33 பந்தில் 4 பவுண்டரிகள் மற்றும் 6 சிக்ஸர்களுடன் 62 ரன்களை குவித்து கடைசி வரை களத்தில் இருந்தார். ஆனாலும் வெஸ்ட் இண்டீஸ் அணியால் வெற்றி பெறமுடியாமல் போனது.

பாகிஸ்தானின் வெற்றிக்கு முக்கியமான காரணம். முகமது ஹஃபீஸ். 158 ரன்கள் என்பது கடினமான இலக்கு அல்ல. வெஸ்ட் இண்டீஸ் அணியும் கிட்டத்தட்ட அந்த இலக்கை விரட்டிவிட்ட நிலையில், வெறும் 7 ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இந்த போட்டியின் முடிவில் தாக்கத்தை ஏற்படுத்திய வீரர் முகமது ஹஃபீஸ் தான். 40 வயதான முகமது ஹஃபீஸ், இந்த போட்டியில் 4 ஓவர்கள் வீசி வெறும் 6 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினார். ஹஃபீஸின் ஸ்பெல் தான் ஆட்டத்தின் முடிவையே தீர்மானித்தது. எனவே அவரே ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios