டி20 உலக கோப்பைக்கு முன் நடந்த முத்தரப்பு டி20 தொடரின் ஃபைனலில் நியூசிலாந்து அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி முத்தரப்பு டி20 தொடரை வென்றது பாகிஸ்தான் அணி. 

நியூசிலாந்து - பாகிஸ்தான் - வங்கதேசம் அணிகளுக்கு இடையே முத்தரப்பு டி20 தொடர் நியூசிலாந்தில் நடந்தது. 3 அணிகளுக்கும் இடையே நடந்த போட்டிகளில் அதிக வெற்றிகளை பெற்ற நியூசிலாந்தும் பாகிஸ்தானும் ஃபைனலில் மோதின. கிறிஸ்ட்சர்ச்சில் நடந்த ஃபைனலில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது. 

பாகிஸ்தான் அணி:

பாபர் அசாம் (கேப்டன்), முகமது ரிஸ்வான் (விக்கெட் கீப்பர்), ஷான் மசூத், ஹைதர் அலி, இஃப்டிகார் அகமது, ஆசிஃப் அலி, ஷதாப் கான், முகமது நவாஸ், முகமது வாசிம், நசீம் ஷா, ஹாரிஸ் ராஃப்.

இதையும் படிங்க - டி20 உலக கோப்பை அரையிறுதியில் எந்த 4 அணிகள் மோதும்..? முன்னாள் லெஜண்ட் கிரிக்கெட்டர் வாசிம் அக்ரம் ஆருடம்

நியூசிலாந்து அணி:

ஃபின் ஆலன், டெவான் கான்வே (விக்கெட் கீப்பர்), கேன் வில்லியம்சன் (கேப்டன்), க்ளென் ஃபிலிப்ஸ், மார்க் சாப்மேன், ஜேம்ஸ் நீஷம், மைக்கேல் பிரேஸ்வெல், இஷ் சோதி, டிம் சௌதி, டிரெண்ட் போல்ட், பிளைர் டிக்னெர்.


முதலில் பேட்டிங் ஆடிய நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் அதிரடியாக ஆடி அரைசதம் அடித்தார். 38 பந்தில் 59 ரன்கள் அடித்து ஷதாப் கான் பந்தில் ஆட்டமிழந்தார் கேன் வில்லியம்சன். க்ளென் ஃபிலிப்ஸ் 29 ரன்களும், சாப்மேன் 25 ரன்களும் அடிக்க, 20 ஓவரில் 163 ரன்கள் அடித்தது நியூசிலாந்து அணி.

164 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய பாகிஸ்தான் அணியில் முகமது ரிஸ்வான்(34), பாபர் அசாம்(15), ஷான் மசூத் (19) ஆகியோர் நல்ல தொடக்கம் கிடைத்தாலும், அதை பெரிய இன்னிங்ஸாக மாற்றவில்லை. ஹைதர் அலி அடித்து ஆடி 15 பந்தில் 31 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். ஆனால் அடித்து அதிரடியாக ஆடிய மற்றொரு வீரர் முகமது நவாஸ் 22 பந்தில் 38 ரன்கள் அடித்து கடைசிவரை களத்தில் நின்று இலக்கை பாகிஸ்தானை இலக்கை எட்டி வெற்றி பெற செய்தார்.

இதையும் படிங்க - டி20 உலக கோப்பை: பயிற்சி போட்டியில் இலக்கை விரட்ட முடியாமல் படுதோல்வி அடைந்த இந்தியா

கடைசி ஓவரின் 3வது பந்தில் இலக்கை அடித்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று முத்தரப்பு டி20 தொடரை வென்றது பாகிஸ்தான் அணி. டி20 உலக கோப்பைக்கு முன்பாக பாகிஸ்தானுக்கு மிகுந்த உற்சாகத்தையும் நம்பிக்கையையும் அளிக்கும் வெற்றி இது.