Asianet News TamilAsianet News Tamil

பாபர் அசாம், ரிஸ்வான் அரைசதம்! எளிய இலக்கை ஈசியாஅடித்து நெதர்லாந்துக்கு எதிரான ஒருநாள்தொடரை வென்றது பாகிஸ்தான்

நெதர்லாந்துக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியிலும் 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி, 2-0 என ஒருநாள் தொடரை வென்றது.
 

pakistan beat netherlands in second odi and win series by 2 0
Author
Netherlands, First Published Aug 18, 2022, 9:18 PM IST

பாகிஸ்தான் அணி நெதர்லாந்தில் சுற்றுப்பயணம் செய்து ஆடிவருகிறது. 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றிருந்த நிலையில், 2வது ஒருநாள் போட்டி இன்று நடந்தது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற நெதர்லாந்து அணி முதலில்  பேட்டிங் ஆடியது. நெதர்லாந்து அணியில் லீட் மற்றும் கூப்பர் ஆகிய இருவரை தவிர வேறு யாருமே சரியாக பேட்டிங் ஆடவில்லை.

இதையும் படிங்க - இந்திய கிரிக்கெட்டின் எதிர்காலத்திற்காக பக்கா பிளானுடன் சிறப்பாக செயல்படும் ரோஹித் - டிராவிட் கூட்டணி

8 ரன்களுக்கே 3 விக்கெட்டுகளை நெதர்லாந்து அணி இழந்துவிட்ட நிலையில், 4வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த லீட் - கூப்பர் ஆகிய இருவரும் இணைந்து அபாரமாக பேட்டிங் ஆடி இருவருமே அரைசதம் அடித்தனர். 4வது விக்கெட்டுக்கு இருவரும் இணைந்து 109 ரன்களை குவித்தனர்.

டாம் கூப்பர் 66 ரன்களுக்கு ஆட்டமிழக்க, அதன்பின்னர் ஒருமுனையில் லீட் நிலைத்து நிற்க மறுமுனையில் மற்ற வீரர்கள் மளமளவென ஆட்டமிழந்தனர். கடைசி விக்கெட்டாக லீக் 89 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். 44.1 ஓவரில் 186 ரன்களுக்கு நெதர்லாந்து அணி ஆல் அவுட்டானது.

இதையும் படிங்க - மனைவியை பிரியும் யுஸ்வேந்திர சாஹல்..? இன்ஸ்டாகிராம் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த சாஹல்

இதையடுத்து 187 ரன்கள் என்ற எளிய இலக்கை விரட்டிய பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர்கள் இமாம் உல் ஹக்(6) மற்றும் ஃபகர் ஜமான் (3)ஆகிய இருவரும் ஒற்றை இலக்கத்தில் ஆட்டமிழந்தனர். ஆனால் அதன்பின்னர் களமிறங்கிய பாபர் அசாம் (57), முகமது ரிஸ்வான் (69*), அகா சல்மான் (50) ஆகிய மூவரும் அபாரமாக பேட்டிங் ஆடி அரைசதம் அடிக்க, 34வது ஓவரிலேயே இலக்கை அடித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற பாகிஸ்தான் அணி, 2-0 என ஒருநாள் தொடரை வென்றது.
 

Follow Us:
Download App:
  • android
  • ios