Asianet News TamilAsianet News Tamil

அந்த 2 மேட்ச் தான் நாங்க வெளியே போக காரணம்.. பாகிஸ்தான் பயிற்சியாளர் வருத்தம்

உலக கோப்பை தொடரின் தொடக்கத்தில் சொதப்பினாலும் பிற்பாதியில் சிறப்பாக ஆடி தொடர்ச்சியாக 4 வெற்றிகளை பெற்று அசத்தியது பாகிஸ்தான் அணி. 

pakista coach mickey arthur speaks about pakistan out of world cup
Author
England, First Published Jul 6, 2019, 2:19 PM IST

உலக கோப்பை தொடரின் லீக் சுற்று இன்றுடன் முடிவடைகிறது. ஆஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து, நியூசிலாந்து ஆகிய 4 அணிகளும் ஏற்கனவே அரையிறுதிக்கு தகுதிபெற்றுவிட்டன. 

இந்த உலக கோப்பையில் துரதிர்ஷ்டமான அணி என்றால் அது பாகிஸ்தான் தான். லீக் சுற்றில் இங்கிலாந்து, நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா ஆகிய வலுவாக அணிகளை வீழ்த்தி 11 புள்ளிகளை பெற்றும் கூட அந்த அணியால் அரையிறுதிக்கு முன்னேற முடியவில்லை. பாகிஸ்தான் அணி பெற்ற அதே 11 புள்ளிகளை பெற்ற நியூசிலாந்து அணி, நெட் ரன்ரேட்டின் அடிப்படையில் அரையிறுதிக்குள் நுழைந்தது. 

pakista coach mickey arthur speaks about pakistan out of world cup

உலக கோப்பை தொடரின் தொடக்கத்தில் சொதப்பினாலும் பிற்பாதியில் சிறப்பாக ஆடி தொடர்ச்சியாக 4 வெற்றிகளை பெற்று அசத்தியது பாகிஸ்தான் அணி. ஆனாலும் முதல் போட்டியில் வெஸ்ட் இண்டீஸிடம் மரண அடி வாங்கியதுதான் அந்த அணி அரையிறுதி வாய்ப்பை இழந்ததற்கு முக்கிய காரணம். 

பாகிஸ்தான் அணியும் நியூசிலாந்து பெற்றுள்ள 11 புள்ளிகளை பெறும்பட்சத்தில் லீக் சுற்றில் நியூசிலாந்தை வீழ்த்திய பாகிஸ்தான் அணிதான் அரையிறுதிக்குள் நுழைய வேண்டும் என்று வங்கதேசம் - பாகிஸ்தான் இடையேயான போட்டிக்கு முன்னதாக வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் ஜாம்பவான் மைக்கேல் ஹோல்டிங் தெரிவித்திருந்தார். 

ஆனால் நெட் ரன்ரேட் அடிப்படையில் தான் முடிவெடுக்கப்படும் என்பதால் பாகிஸ்தான் வெளியேறியது. இங்கிலாந்து, நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா போன்ற நல்ல அணிகளை வீழ்த்தியும் கூட பாகிஸ்தான் அணியால் அரையிறுதிக்கு முன்னேற முடியாதது தான் அதிருப்தியளிக்கக்கூடிய விஷயம் தான்.

pakista coach mickey arthur speaks about pakistan out of world cup

வங்கதேசத்துக்கு எதிராக வெற்றி பெற்று வெற்றிகரமாக உலக கோப்பையை விட்டு வெளியேறிய பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளர் மிக்கி ஆர்துர் தனது வருத்தத்தை பதிவு செய்துள்ளார். இதுகுறித்து பேசிய மிக்கி ஆர்துர், பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகள் ஒரே புள்ளியை பெற்றிருந்ததால் இரு அணிகளுக்கு இடையேயான போட்டி முடிவை ஐசிசி கருத்தில் கொண்டிருக்கலாம். எனினும் பாகிஸ்தான் அணி வெளியேறியதற்கு காரணம், வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு இடையேயான போட்டிகள் தான். வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான படுதோல்வி மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஜெயித்திருக்க வேண்டிய போட்டியில் தோற்றது ஆகிய இரண்டு போட்டிகள் தான் காரணமாக அமைந்துவிட்டன என்று மிக்கி ஆர்துர் தெரிவித்துள்ளார். 
 

Follow Us:
Download App:
  • android
  • ios