வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்த இந்திய அணி, 3 டி20, 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட அனைத்து தொடரிலுமே அந்த அணியை ஒயிட்வாஷ் செய்து வென்றது. 

வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணம் முடிந்த நிலையில், அடுத்ததாக இந்தியாவிற்கு வரும் தென்னாப்பிரிக்க அணியுடன் இந்திய அணி, 3 டி20 மற்றும் 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடவுள்ளது. 

இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான தொடருக்கான இரு அணிகளும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுவிட்டன. இந்நிலையில், தென்னாப்பிரிக்க டி20 அணியில் ஒரு அதிரடி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 

ஜேஜே ஸ்மட்ஸுக்கு பதிலாக ஜார்ஜ் லிண்டே அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். தென்னாப்பிரிக்காவின் ஆல்ரவுண்டர் ஜேஜே ஸ்மட்ஸ், ஃபிட்னெஸ் டெஸ்ட்டில் தேறவில்லை. இதையடுத்து அவர் அதிரடியாக நீக்கப்பட்டு, ஸ்பின்னர் ஜார்ஜ் லிண்டே அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்தியா ஏ அணிக்கு எதிராக அதிகாரப்பூர்வமற்ற ஒருநாள் தொடரில் ஆடிவரும் தென்னாப்பிரிக்க ஏ அணியில் லிண்டே ஆடிவருவது குறிப்பிடத்தக்கது. 

டி20 தொடருக்கான தென்னாப்பிரிக்க அணி:

குயிண்டன் டி காக்(கேப்டன், விக்கெட் கீப்பர்), வாண்டெர் டசன்(துணை கேப்டன்), டெம்பா பவுமா, ஜூனியர் டாலா, ஃபார்டியூன், பியூரன் ஹென்ரிக்ஸ், ரீஸா ஹென்ரிக்ஸ், டேவிட் மில்லர், அன்ரிச் நோர்ட்ஜே, ஃபெலுக்வாயோ, ட்வைன் ப்ரிடோரியஸ், ரபாடா, ஷாம்ஸி, ஜார்ஜ் லிண்டே.