ஆஸ்திரேலிய அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து ஆடிவருகிறது. டி20 தொடரை 2-0 என ஆஸ்திரேலிய அணி வென்ற நிலையில், ஒருநாள் தொடர் நடந்துவருகிறது. 

5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டி ஹைதராபாத்தில் நடந்தது. அந்த போட்டியில்  6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்ற இந்திய அணி, 1-0 என முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில், இரண்டாவது போட்டி நாக்பூரில் நடக்கிறது. 

இந்த போட்டியிலும் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஆரோன் ஃபின்ச் தான் டாஸ் வென்றார். டாஸ் வென்ற ஃபின்ச், இந்திய அணியை முதலில் பேட்டிங் செய்ய பணித்தார். 

நாக்பூர் மைதானம் பேட்டிங்கிற்கு சாதகமான மைதானம். இங்கு முதல் பேட்டிங்கில் சராசரி ஸ்கோர் 292. அதுமட்டுமல்லாமல் ரோஹித், தவான், கோலி, தோனி ஆகியோரின் ஆஸ்தான மைதானம். குறிப்பாக ரோஹித் மற்றும் தோனியின் கோட்டை என்றே கூறலாம். 

பொதுவாக முதல் பேட்டிங் ஆடும்போது களத்தில் நிலைத்துவிட்டால் ரோஹித் சர்மா பெரிய இன்னிங்ஸ் ஆடிவிடுவார். அந்த வகையில் பேட்டிங் பிட்ச்சில் இந்திய அணியை முதலில் பேட்டிங் செய்ய பணித்துள்ளது ஆஸ்திரேலிய அணி. எனவே 350 ரன்களுக்கு மேல் இந்திய அணி அடிக்க வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன. 

இந்திய அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. முதல் போட்டியில் ஆடிய அதே அணிதான் இரண்டாவது போட்டியிலும் ஆடும். எந்த மாற்றமும் செய்யப்பட வாய்ப்பில்லை என்று நமது ஏசியாநெட் தமிழ் தளத்தில் எழுதியிருந்தோம். நாம் சொன்னதை போலவே இந்த போட்டிக்கான இந்திய அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. 2வது போட்டியில் அந்த மாற்றம் கண்டிப்பா இருக்காது!! உத்தேச இந்திய அணி

ஆஸ்திரேலிய அணி இரண்டு மாற்றங்களுடன் களமிறங்குகிறது. ஆஷ்டன் டர்னருக்கு பதிலாக ஷான் மார்ஷும் பெஹ்ரெண்டோர்ஃபுக்கு பதில் நாதன் லயனும் அணியில் எடுக்கப்பட்டுள்ளனர். 

இந்திய அணி:

ரோஹித், தவான், கோலி(கேப்டன்), ராயுடு, தோனி(விக்கெட் கீப்பர்), கேதர் ஜாதவ், விஜய் சங்கர், ஜடேஜா, குல்தீப், பும்ரா, ஷமி. 

ஆஸ்திரேலிய அணி:

ஃபின்ச்(கேப்டன்), உஸ்மான் கவாஜா, மார்கஸ் ஸ்டோய்னிஸ், கிளென் மேக்ஸ்வெல், ஷான் மார்ஷ், ஹேண்ட்ஸ்கம்ப், அலெக்ஸ் கேரி(விக்கெட் கீப்பர்), நாதன் குல்ட்டர்நைல், பாட் கம்மின்ஸ், நாதன் லயன், ஆடம் ஸாம்பா.