முட்டி போட்ட நிலையிலேயே படியேறி சென்று திருப்பதி கோயிலில் சாமி தரிசனம் செய்த நிதிஷ் குமார் ரெட்டி!
Nitish Kumar Reddy Visited Tirupati Temple Climbed Stairs on his Knees : ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் போட்டியில் சதம் அடித்த நிதிஷ் குமார் ரெட்டி முட்டி போட்டபடி சென்று திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சாமி தரிசனம் செய்துள்ளார்.
Nitish Kumar Reddy Visited Tirupati Temple Climbed Stairs on his Knees : ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டிராபி தொடரில் பங்கேற்றது. இதில் முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. 2ஆது போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது. 3ஆவது போட்டி டிராவில் முடியவே 4 மற்றும் 5 ஆவது போட்டிகளில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்று 3-1 என்று தொடரை கைப்பற்றி சாதனை படைத்தது.
இந்த தொடரின் பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியான 4ஆவது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் நிதிஷ் குமார் ரெட்டி அதிரடியாக விளையாடி டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது முதல் சதம் அடித்து சாதனை படைத்தார். இந்தப் போட்டியில் அவர் 189 பந்துகளில் 11 பவுண்டரி, ஒரு சிக்சர் உள்பட 114 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். 2ஆவது இன்னிங்ஸில் 1 ரன்னில் ஆட்டமிழந்து அதிர்ச்சி கொடுத்தார். எனினும் இந்தப் போட்டியில் இந்திய அணி 184 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
மெல்பர்ன் டெஸ்டுக்கு பிறகு ஓய்வுபெற விரும்பிய ரோகித் சர்மா; மனதை மாற்றியது யார்?
இந்த தொடரில் 5 போட்டிகளில் விளையாடிய நிதிஷ் குமார் ரெட்டி 298 ரன்கள் எடுத்தார். இந்த தொடரில் அதிக ரன்கள் எடுத்த 2ஆவது இந்திய வீரர் என்ற சாதனையை இவர் படைத்தார். இந்த தொடரில் இந்திய அணி தோல்வியை தழுவிய நிலையில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் 3ஆவது இடத்திற்கு சரிந்துள்ளது. அதோடு இந்த ஆண்டு நடைபெற இருக்கும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டிக்கு தகுதி பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் தான் ஆஸ்திரேலியாவிலிருந்து இந்திய அணி வீரர்கள் நாடு திரும்பினர். இதில், கடந்த சில தினங்களுக்கு முன்பு விசாகப்பட்டினம் வந்த நிதிஷ் குமார் ரெட்டிக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
'இண்டிகோ ஊழியர்கள் மோசமான நடத்தை; விமானத்தை தவற விட்டேன்'; அபிஷேக் சர்மா குற்றச்சாட்டு!
இதையடுத்து நேற்று திருப்பதி கோயிலுக்கு சென்ற நிதிஷ் குமார் ரெட்டி, முட்டி போட்டபடி படியேறி சென்று திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்துள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.