MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Sports
  • Sports Cricket
  • இந்திய அணியில் சஞ்சு சாம்சன் கம்பேக்.. பயிற்சியாளர் 'க்ரீன் சிக்னல்'.. 3 அதிரடி மாற்றங்கள்!

இந்திய அணியில் சஞ்சு சாம்சன் கம்பேக்.. பயிற்சியாளர் 'க்ரீன் சிக்னல்'.. 3 அதிரடி மாற்றங்கள்!

டி20 உலகக்கோப்பையில் ஜிம்பாப்வேவுக்கு எதிரான சூப்பர் 8 போட்டியில் இந்திய அணியில் சஞ்சு சாம்சன் இடம்பெறுவதை பயிற்சியாளர் உறுதி செய்துள்ளார். இது தொடர்பான முழு விவரங்களை பார்க்கலாம்.

2 Min read
Author : Rayar r
Published : Feb 25 2026, 06:56 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
இந்தியா vs ஜிம்பாப்வே போட்டி
Image Credit : Getty

இந்தியா vs ஜிம்பாப்வே போட்டி

டி20 உலகக் கோப்பையில் நாளை (பிப்ரவரி 26) ஜிம்பாப்வேக்கு எதிரான வாழ்வா? சாவா? சூப்பர் 8 போட்டிக்கு முன்னதாக பேசிய இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர் சிதான்ஷு கோடக் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் மாற்றங்கள் இருக்கலாம் என உறுதிப்படுத்தியுள்ளார். இந்திய பேட்டிங் பயிற்சியாளரிடம், சஞ்சு சாம்சன் மற்றும் அக்சர் படேல் அணியில் மீண்டும் இந்திய அணியில் சேர்க்கப்படுவது குறித்துக் கேட்கப்பட்டது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
25
பிளேயிங் லெவனில் மாற்றம்
Image Credit : Getty

பிளேயிங் லெவனில் மாற்றம்

இதற்குப் பதிலளித்த சிதான்ஷு கோடக், "பிளேயிங் லெவனில் மாற்றங்கள் இருக்கலாம். நாங்கள் இதுபற்றி வெளிப்படையாக‌ விவாதிக்கிறோம். ஏனெனில், இரண்டு இடது கை தொடக்க ஆட்டக்காரர்கள், மூன்றாவது வீரரும் இடது கை ஆட்டக்காரர். மேலும் எதிரணியிடம் பந்துவீச்சு விருப்பங்கள் உள்ளன. 

தனிப்பட்ட முறையில், அங்கும் எந்தப் பிரச்சனையும் இருப்பதாக நான் நினைக்கவில்லை. ஆனால் முதல் ஓவரிலேயே நாங்கள் விக்கெட்டுகளை இழப்பதால், எந்த அணியும் இதைப் பற்றி யோசிக்கும்" என்றார்.

Related Articles

Related image1
பள்ளி செல்லும் வயதில் சொகுசு கார்.. வைபவ் சூர்யவன்ஷிக்கு டாடாவின் மெகா பரிசு! எந்த கார் தெரியுமா?
Related image2
ஹாரி ப்ரூக் ருத்ரதாண்டவம்.. மேஜிக் இன்னிங்ஸ்.. பாகிஸ்தானை பந்தாடி செமி பைனல் சென்ற இங்கிலாந்து!
35
திலக் வர்மாவுக்கு பதில் சஞ்சு சாம்சன்
Image Credit : Team India\BCCI

திலக் வர்மாவுக்கு பதில் சஞ்சு சாம்சன்

ஜிம்பாப்வேவுக்கு எதிரான போட்டியில் திலக் வர்மாவுக்குப் பதிலாக சஞ்சு சாம்சன் ஆடும் லெவனில் இடம்பெறலாம் என்று யூகங்கள் எழுந்துள்ளன. மேலும் உலகின் நம்பர் 1 டி20 பேட்ஸ்மேனான அபிஷேக், டி20 உலகக் கோப்பையில் பேட்டிங்கில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். நான்கு போட்டிகளில் ஹாட்ரிக் டக் அவுட் உள்பட வெறும் 15 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார்.

45
அபிஷேக் சர்மா இடம்பெறுவாரா?
Image Credit : Getty

அபிஷேக் சர்மா இடம்பெறுவாரா?

ஜிம்பாப்வேக்கு எதிரான வாழ்வா சாவா போட்டிக்கு முன்னதாக, சஞ்சு வலைப்பயிற்சியில் ஈடுபட்டதால், அவர் விளையாடுவாரா என்று கோடக்கிடம் கேட்கப்பட்டது. இதற்குப் பதிலளித்த அவர், ''பொதுவாக, ஒவ்வொரு வலைப்பயிற்சியிலும் அபிஷேக் சர்மா தொடக்கத்தில் பேட்டிங் செய்வதில்லை. அவர் எப்போதும் இரண்டாவது அல்லது மூன்றாவது ஜோடியாகத்தான் பேட்டிங் செய்வார்.

பயிற்சியாளர் சொல்வது என்ன?

சில நேரங்களில் அவர் சில பயிற்சிகளைச் செய்ய விரும்பினால், அவர் பின்னால் சென்று சில விஷயங்களைச் செய்வார். எனவே இது ஒரு அறிகுறி அல்ல. ஆகவே நிச்சயமாக அபிஷேக் சர்மாவை விளையாட வைப்பது பற்றி யோசனை இருக்கும், அதில் சந்தேகமில்லை. ஆனால் வலைப்பயிற்சிகளை வைத்து இதை யாரும் முடிவு செய்ய வேண்டாம்' என்று கூறினார்.

55
இந்திய அணி பிளேயிங் லெவன்
Image Credit : ANI

இந்திய அணி பிளேயிங் லெவன்

ஜிம்பாப்வேவுக்கு எதிரான போட்டியில் இந்திய அணி பிளேயின் லெவன்: சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), அக்சர் படேல், சஞ்சு சாம்சன், அபிஷேக் சர்மா, ஹர்திக் பாண்ட்யா, இஷான் கிஷன், ஷிவம் துபே, ஜஸ்பிரித் பும்ரா, வருண் சக்கரவர்த்தி, குல்தீப் யாதவ், அர்ஷ்தீப் சிங்.

About the Author

RR
Rayar r
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
டி20 உலகக் கோப்பை
விளையாட்டு

Latest Videos
Recommended Stories
Recommended image1
15 வயசு சிறுவனின் அசுர வேட்டை.. பும்ராவின் வீழ்ச்சி.. PBKSன் சோக கதை.. செம ட்விஸ்ட் கொடுத்த IPL 2026
Recommended image2
IPL 2026: RCB vs GT மேட்ச் மழையால் ரத்தானால் பைனலுக்கு யாருக்கு வாய்ப்பு! ரிசர்வ் டே உண்டா?
Recommended image3
IPL 2026 Winner : இந்த வருஷம் ஐபிஎல் கப் இந்த டீமுக்கு தான்...! ஹர்திக் பாண்டியாவுக்குள் இப்படி ஒரு பவரா?
Related Stories
Recommended image1
பள்ளி செல்லும் வயதில் சொகுசு கார்.. வைபவ் சூர்யவன்ஷிக்கு டாடாவின் மெகா பரிசு! எந்த கார் தெரியுமா?
Recommended image2
ஹாரி ப்ரூக் ருத்ரதாண்டவம்.. மேஜிக் இன்னிங்ஸ்.. பாகிஸ்தானை பந்தாடி செமி பைனல் சென்ற இங்கிலாந்து!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved