மெல்பர்ன் டெஸ்டுக்கு பிறகு ஓய்வுபெற விரும்பிய ரோகித் சர்மா; மனதை மாற்றியது யார்?
இந்திய கேப்டன் ரோகித் சர்மா மெல்பர்ன் டெஸ்டுக்கு பிறகு ஓய்வுபெற விரும்பியதாவும், அதன்பிறகு அவர் தனது மனதை மாற்றியதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
Rohit Sharma and Bumrah
இந்தியா படுதோல்வி
இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இதில் பெர்த்தில் நடந்த முதல் போட்டியில் மட்டும் இந்திய அணி 295 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆனால் அடிலெய்டில் நடந்த 2வது டெஸ்ட்டில் 10 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது.
3வது டெஸ்ட் டிராவில் முடிந்தது. மெல்போர்னில் நடந்த 4வது டெஸ்ட்டில் 184 ரன்கள் வித்தியாசத்திலும் சிட்னியில் நடந்த 5வது டெஸ்ட்டில் 6 விக்கெட் வித்தியாசத்திலும் இந்திய அணி படுதோல்வி அடைந்தது.
India vs Australia Series
கழற்றி விடப்பட்ட ரோகித்
ஆஸ்திரேலிய தொடரில் இந்திய அணி படுதோல்விகள் அடைய முக்கிய காரணம் ரோகித் சர்மா, விராட் கோலியின் படுமோசமான பேட்டிங் தான். அதுவும் அணிக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டிய கேப்டன் ரோகித் சர்மா வெறும் 6 சரசாரியுடன் 31 ரன்கள் மட்டுமே எடுத்தார். கேப்டன்சியிலும் சரியான முடிவுகள் எடுக்க முடியாமல் தடுமாறினார். இதனால் கடைசி சிட்னி டெஸ்ட்டில் அவர் கழற்றி விடப்பட்டார்.
'இண்டிகோ ஊழியர்கள் மோசமான நடத்தை; விமானத்தை தவற விட்டேன்'; அபிஷேக் சர்மா குற்றச்சாட்டு!
Rohit sharma Poor Batting
ரோகித் மனதை மாற்றியது யார்?
ஆஸ்திரேலியா தொடருக்கு பிறகு ரோகித் சர்மா ஒய்வு பெற இருப்பதாக தகவல் வெளியானது. ஆனால் இதை மறுத்த ரோகித் சர்மா, என்னை ஓய்வு பெறும்படி யாரும் கட்டாயப்படுத்த முடியாது என்று கூறியிருந்தார். இந்நிலையில், மெல்பர்ன் டெஸ்ட் போட்டிக்கு பிறகு ரோகித் சர்மா ஓய்வு பெற முடிவு எடுத்ததாகவும், அவரது நலம் விரும்பிகள், கிரிக்கெட் நண்பர்கள் அவரது மனதை மாற்றியதாகவும் தற்போது தகவல் வெளியாகி உள்ளது.
அதே வேளையில் ரோஹித் சர்மா தனது முடிவை மாற்றிக்கொண்டதில் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் அதிருப்தி அடைந்ததாக கூறப்படுகிறது. சிட்னி டெஸ்டுக்கு முன்பு இந்திய அணியின் பிளேயிங் லெவனில் ரோகித் சர்மாவை சேர்க்க கம்பீர் மறுத்து விட்டதாகவும், ரோகித் ஆஸ்திரேலியே தொடர் முடிந்தவுடன் ஓய்வு பெற்று விடுவார் என கம்பீர் எதிர்பார்த்ததாகவும் தகவல்கள் கூறுகின்றன.
Rohit Sharma Poor Captaincy
கவுதம் கம்பீரின் செயல்பாடுகள்
கவுதம் கம்பீரின் செயல்பாடுகளை மனதில் வைத்தே, 'தன்னை யாரும் ஓய்வுபெறும்படி நிர்பந்திக்க முடியாது' என ரோகித் சர்மா கூறியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அண்மையில் ஆஸ்திரேலியா தொடருக்கான தோல்வி குறித்து பிசிசிஐ நடத்திய ஆய்வு கூட்டத்தில் கலந்து கொண்ட ரோகித் சர்மா, சாம்பியன்ஸ் டிராபி வரை தான் கேப்டனாக செயல்படுவதாக பிசிசிஐ அதிகாரிகள் மற்றும் தேர்வர்களிடம் தெரிவித்தார்.
இங்கிலாந்துக்கு எதிரான வெளிநாட்டு டெஸ்ட் தொடரில் ரோகித் சர்மா தேர்வு செய்யப்பட மாட்டார் என்று பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Fact Check: ஹர்திக் பாண்ட்யா, ஜான்வி கபூர் டேட்டிங்? வைரலான புகைப்படங்கள்; உண்மை என்ன?