ஆனந்த் அம்பானி சங்கீத் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஹர்திக் பாண்டியாவை, கஷ்டமான காலங்கள் நீடிக்காது என்றும் கடினமான மனிதர்கள் சாதிப்பார்கள் என்றும் நீதா அம்பானி புகழ்ந்து பேசியுள்ளார்.

ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவர் முகேஷ் அம்பானி - நீதா அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானிக்கும் அவரது காதலி ராதிகா மெர்ச்சண்ட்டுக்கும் வரும் 12-ஆம் தேதி மும்பையில் திருமணம் நடைபெற உள்ளது. ஏற்கனவே இரண்டு முறை இவர்களின் ப்ரீ வெட்டிங் நிகழ்ச்சி நடந்து முடிந்த நிலையில், நேற்று இவர்களது சங்கீத் நிகழ்ச்சி மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கிரிக்கெட் மற்றும் பாலிவுட் பிரபலங்கள் என்று ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்த நிலையில் தான் இந்த நிகழ்ச்சியில் டி20 உலகக் கோப்பையை வென்று கொடுத்த இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா, சூர்யகுமார் யாதவ் மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகியோரும் கலந்து கொண்டனர்.

Scroll to load tweet…

முதலில் பூ மாலை பொழிந்து வரவேற்ற நீதா அம்பானி, பூசணிக்காய் மூலமாக திருஷ்டி சுற்றியதைத் தொடர்ந்து சுவாமிக்கு பூஜை செய்தனர். இதில் ரோகித் சர்மா தனது மனைவி ரித்திகாவுடனும், சூர்யகுமார் யாதவ் தனது மனைவி தேவிஷா ஷெட்டியுடனும் கலந்து கொண்ட நிலையில் ஹர்திக் பாண்டியா மட்டும் மனைவி நடாஷா உடன் வராமல் தனியாக வந்திருந்தார்.

அபிஷேக் சர்மா, ரியான் பராக், துருவ் ஜூரெல் அறிமுகம் – டாஸ் வென்று பவுலிங் எடுத்த டீம் இந்தியா!

இந்த நிலையில் தான் டிராபி வென்று கொடுத்த ரோகித் சர்மா, சூர்யகுமார் யாதவ் மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகியோருக்கு பாராட்டு தெரிவித்துள்ளார். இந்த நிகழ்ச்சியில் குடும்பத்தினர், நண்பர்கள், சிறப்பு விருந்தினர்கள் என்று ஏராளமானோர் கலந்து கொண்டிருந்த நிலையில், அவர்கள் அனைவரும் எழுந்து நின்று கைதட்டி உற்சாகமாக ஆரவாரம் செய்தனர்.

அப்போது பேசிய நீதா அம்பானி கூறியிருப்பதாவது: இந்த மூன்று கிரிக்கெட் வீரர்களும் தனது மும்பை இந்தியன்ஸ் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், இந்த வெற்றி தனக்கு எவ்வளவு முக்கியமானது என்பதை வெளிப்படுத்தினார். உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்திய அணியின் வெற்றியின் உற்சாகத்தையும், கடை ஓவரில் இந்திய அணி விளையாடியதையும் நினைவு கூர்ந்த நீதா அம்பானி கிட்டத்தட்ட முடியாத என்ற சூழலிலிருந்து இந்திய அணி வெற்றியைப் பெற்றதை தேசம் எப்படி மூச்சுத் திணறலுடன் பார்த்தது என்பதை எடுத்துக்காட்டினார்.

சங்கீத் நிகழ்ச்சியில் ரோகித், ஹர்திக், சூர்யகுமாருக்கு ராஜமரியாதை கொடுத்து கௌரவித்த அம்பானி குடும்பத்தினர்!

ஹர்திக் பாண்டியா மீதான மக்களின் அன்பை அவர் எதிரொலித்தார், "கடினமான காலங்கள் நீடிக்காது, ஆனால் கடினமான மனிதர்கள் சாதிக்கிறார்கள் என்பதை சுட்டிக் காட்டி பேசினார். இவரைத் தொடர்ந்து பேசிய முகேஷ் அம்பானி, இந்தியாவை பெருமைப்படுத்தியதற்காக கிரிக்கெட் வீரர்களை வாழ்த்தினார் மற்றும் இந்தியாவின் கடைசி உலகக் கோப்பை 2011 உணர்வை நினைவு கூர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

MS Dhoni Birthday: தோனியின் பர்த்டே செலிபிரேஷன் ஆரம்பம் – 100 அடி உயரத்திற்கு கட் அவுட் வைத்த ரசிகர்கள்!

கடந்த மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் நடைபெற்ற ஐபிஎல் 2024 தொடரின் 17 சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக இருந்த ரோகித் சர்மா நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக ஹர்திக் பாண்டியா கேப்டனாக அறிவிக்கப்பட்டார். இவரது தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் விளையாடிய 14 போட்டிகளில் 4 போட்டிகளில் வெற்றியும், 10 போட்டிகளில் தோல்வியும் அடைந்து தொடரிலிருந்து வெளியேறியது.

இந்த தொடரில் ஹர்திக் பாண்டியாவின் செயல் ரசிகர்களுக்கு வெறுப்பை உண்டாக்கியது. மேலும், ரோகித் சர்மாவிடம் நடந்து கொண்ட விதம் விமர்சனத்தை உண்டாக்கியது. ஆனால், அந்த விமர்சனத்திற்கு எல்லாம் டி20 உலகக் கோப்பை மூலமாக பதிலடி கொடுத்து தன் மீதான விமர்சனத்தை மாற்றி ஹீரோவாகியுள்ளார்.