கரீபியன் பிரீமியர் லீக்கில் செயிண்ட் கிட்ஸ் அண்ட் நெவிஸ் பாட்ரியாட்ஸ் அணி மற்றும் கயானா அமேசான் வாரியர்ஸ் அணிகளுக்கு இடையே நடந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய பாட்ரியாட்ஸ் அணி 20 ஓவரில் 150 ரன்கள் அடித்தது. 

151 ரன்கள் என்ற இலக்குடன் ஆடிய வாரியர்ஸ் அணி 25 ரன்களுக்கே பிரண்டன் கிங், ஹெட்மயர், கெவின் சின்க்லைர் ஆகிய மூவரும் ஆட்டமிழந்தனர். நான்காம் வரிசையில் இறங்கிய நிகோலஸ் பூரான், களத்திற்கு வந்தது முதலே பவுண்டரியும் சிக்ஸருமாக அடித்து நொறுக்கினார்.

வெறும் 45 பந்தில் 4 பவுண்டரிகள் மற்றும் 10 சிக்ஸர்களுடன் 222.22 என்ற ஸ்டிரைக் ரேட்டுடன் சதமடித்து 18வது ஓவரிலேயே இலக்கை எட்டி வாரியர்ஸ் அணிக்கு வெற்றியை தேடிக்கொடுத்தார் நிகோலஸ் பூரான்.

ஐபிஎல்லில் முதல்முறையாக கோப்பையை வெல்லும் முனைப்பில் உள்ள கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி, தங்கள் அணி வீரரான பூரான், செம ஃபார்மில் இருப்பதையடுத்து, மகிழ்ச்சியும் உற்சாகமும் அடைந்துள்ளது.