வெஸ்ட் இண்டீஸ் அணி 3 டி20 மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் ஆடுவதற்காக நியூசிலாந்திற்கு சென்றுள்ளது. முதல் டி20 போட்டி இன்று ஆக்லாந்தில் நடக்கிறது. ஐபிஎல் முழுவதும் ஆடிவிட்டு வந்த கேன் வில்லியம்சன் மற்றும் டிரெண்ட் போல்ட் ஆகியோருக்கு, டெஸ்ட் போட்டிகளில் ஆடுவதற்காக டி20 தொடரில் ஓய்வளிக்கப்பட்டுள்ளது.

எனவே டிம் சௌதி நியூசிலாந்து அணியின் கேப்டனாக இருந்து வழிநடத்துகிறார். டாஸ் வென்ற டிம் சௌதி ஃபீல்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங் ஆடிவருகிறது.

நியூசிலாந்து அணி:

மார்டின் கப்டில், டிம் சேஃபெர்ட்(விக்கெட் கீப்பர்), டெவான் கன்வே, க்ளென் ஃபிலிப்ஸ், ரோஸ் டெய்லர், ஜேம்ஸ் நீஷம், மிட்செல் சாண்ட்னெர், டிம் சௌதி(கேப்டன்), கைல் ஜேமிசன், லாக்கி ஃபெர்குசன், ஹாமிஷ் பென்னெட்.

வெஸ்ட் இண்டீஸ் அணி:

பிரண்டன் கிங், ஆண்ட்ரே ஃப்ளெட்சர், ஷிம்ரான் ஹெட்மயர், நிகோலஸ் பூரான்(விக்கெட் கீப்பர்), ரோவ்மன் பவல், பொல்லார்டு(கேப்டன்), ஃபேபியன் ஆலன், கீமோ பால், ஷெல்டான் கோட்ரெல், கெஸ்ரிக் வில்லியம்ஸ், ஒஷேன் தாமஸ்.