Asianet News TamilAsianet News Tamil

NZ vs IND: இந்தியாவிற்கு எதிரான முதல் ஒருநாள் போட்டிக்கான நியூசிலாந்து அணியின் உத்தேச ஆடும் லெவன்

இந்தியாவிற்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் களமிறங்கும் நியூசிலாந்து அணியின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம்.
 

new zealand team probable playing eleven for the first odi against india
Author
First Published Nov 24, 2022, 8:59 PM IST

இந்தியா - நியூசிலாந்து இடையேயான 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரை ஹர்திக் பாண்டியா தலைமையிலான இந்திய அணி 1-0 என தொடரை வென்றது. 

3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டி நாளை(நவம்பர் 25) ஆக்லாந்தில் நடக்கிறது. இந்த தொடரில் கேப்டன் ரோஹித் சர்மா ஆடாததால் ஷிகர் தவான் தலைமையில் இந்திய அணி ஆடுகிறது.

NZ vs IND: முதல் ODI-க்கு வாசிம் ஜாஃபர் தேர்வு செய்த இந்திய அணியின் ஆடும் லெவன்! ரிஷப்-சாம்சன் ரசிகர்கள் மோதல்

ஆக்லாந்தில் நடக்கும் முதல் ஒருநாள் போட்டியில் களமிறங்கும் கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணியின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம்.

நியூசிலாந்து கிரிக்கெட்டில் மார்டின் கப்டிலின் காலம் முடிந்துவிட்டது. வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் நியூசிலாந்துஅணியின் அடுத்த தொடக்க வீரராக ஃபின் ஆலன் உருவெடுத்துவிட்டார். எனவே ஃபின் ஆலன் மற்றும் டெவான் கான்வே ஆகிய இருவரும் தொடக்க வீரர்களாக இறங்குவார்கள். 3ம் வரிசையில் கேப்டன் கேன் வில்லியம்சனும், 4ம் வரிசையில் டேரைல் மிட்செலும் ஆடுவார்கள். அதன்பின்னர் க்ளென் ஃபிலிப்ஸ் இறங்குவார். விக்கெட் கீப்பர் டாம் லேதம். பேட்டிங் - ஆஃப் ஸ்பின் ஆல்ரவுண்டரான மைக்கேல் பிரேஸ்வெல்லும், ஸ்பின்னராக மிட்செல் சாண்ட்னெரும் ஆடுவார்கள். 

ஃபாஸ்ட் பவுலர்களாக ஆடம் மில்னே, டிம் சௌதி மற்றும் லாக்கி ஃபெர்குசன் ஆகிய மூவரும் ஆடுவார்கள்.

தொடர்ச்சியாக 5 சதங்கள் அடித்தது எப்படி? ஏலத்திற்கு முன் தன்னை அணுகிய ஐபிஎல் அணி.! மனம் திறந்த நாராயண் ஜெகதீசன்

உத்தேச நியூசிலாந்து அணி:

ஃபின் ஆலன், டெவான் கான்வே, கேன் வில்லியம்சன் (கேப்டன்), டேரைல் மிட்செல், டாம் லேதம் (விக்கெட் கீப்பர்), க்ளென் ஃபிலிப்ஸ், மைக்கேல் பிரேஸ்வெல், மிட்செல் சாண்ட்னெர், டிம் சௌதி, ஆடம் மில்னே, லாக்கி ஃபெர்குசன்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios