இந்தியாவுக்கு எதிரான டி20 தொடர்: 15 பேர் கொண்ட நியூசிலாந்து அணி அறிவிப்பு!
இந்தியாவுக்கு எதிரான டி20 தொடருக்கான நியூசிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரிலும், 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரிலும் விளையாடி வருகிறது. ஏற்கனவே நடந்து முடிந்த 2 டெஸ்ட் போட்டிகளும் டிராவில் முடிந்த நிலையில், 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடர் நடந்து வருகிறது. இதில் முதல் போட்டியில் பாகிஸ்தான் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 2ஆவது ஒரு நாள் போட்டியில் நியூசிலாந்து அணி 79 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதையடுத்து வெற்றியை தீர்மானிக்கும் 3ஆவது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி இன்று நடக்கிறது. இதில் வெற்றி பெறும் அணி 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரை கைப்பற்றும் என்பது குறிப்பிடத்தக்கது.
ட்ரோன் பிசினஸில் இறங்கிய தோனி..! "Droni" என்ற கண்காணிப்பு ட்ரோன் அறிமுகம்
பாகிஸ்தான் தொடரைத் தொடர்ந்து இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் நியூசிலாந்து அணி 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரிலும், 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரிலும் பங்கேற்கிறது. வரும் 18 ஆம் தேதி முதல் ஒரு நாள் போட்டி தொடங்குகிறது. வரும் 27 ஆம் தேதி முதல் டி20 போட்டி தொடங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவுக்கு எதிரான டி20 போட்டி தொடருக்கான நியூசிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. 15 பேர் கொண்ட நியூசிலாந்து அணியில் மிட்செல் சாண்ட்னர் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். கேன் வில்லியம்சன், டிம் சௌதி ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. கேல் ஜேமிசன், மேட் ஹென்றி, ஆடம் மில்னே, பென் சியர்ஸ் ஆகியோர் காயம் காரணமாக அணியில் இடம் பெறவில்லை.
எஸ்ஏ20:போட்டியை வேடிக்கை பார்த்த காவ்யா மாறன்: பிரிட்டோரியா கேபிடல்ஸ் அணி அபார வெற்றி!
இந்தியாவுக்கு எதிரான டி20 தொடருக்கான நியூசிலாந்து அணி:
மிட்செல் சாண்ட்னர் (கேப்டன்), பின் ஆலென், மைக்கேல் பிரேஸ்வெல், மார்க் சாப்மேன், டேன் கிளவர், டேவோன் கான்வே, ஜாகோப் டப்பி, லக்கி பெர்குசன், பென் லிஸ்டர், டேரில் மிட்செல், கிளென் பிலிப்ஸ், மைக்கேல் ரிப்பன், ஹென்றி சிப்லே, இஷ் சோதி, பிளேர் டிக்னர்.
புகழ் மழை பொழிந்த ஜெய் ஷாவுக்கு சாதனை நாயகன் பிரித்வி ஷா நன்றி..!
ஜனவரி 18 - இந்தியா - நியூசிலாந்து - முதல் ஒரு நாள் போட்டி - ஹைதராபாத்
ஜனவரி 21 - இந்தியா - நியூசிலாந்து - 2ஆவது ஒரு நாள் போட்டி - ராய்பூர்
ஜனவரி 24 - இந்தியா - நியூசிலாந்து - 3ஆவது ஒரு நாள் போட்டி - இந்தூர்
ஜனவரி 27 - இந்தியா - நியூசிலாந்து - முதல் டி20 போட்டி - ராஞ்சி
ஜனவரி 29 - இந்தியா - நியூசிலாந்து - 2ஆவது டி20 போட்டி - லக்னோ
பிப்ரவரி 01 - இந்தியா - நியூசிலாந்து - 3ஆவது டி20 போட்டி - அகமதாபாத்