Asianet News TamilAsianet News Tamil

ட்ரோன் பிசினஸில் இறங்கிய தோனி..! "Droni" என்ற கண்காணிப்பு ட்ரோன் அறிமுகம்

ஏற்கனவே பல தொழில்களில் முதலீடு செய்து கோலோச்சிவரும், இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் தோனி, சென்னையில் இயங்கும் ட்ரோன் நிறுவனத்தில் முதலீடு செய்து அந்த நிறுவனத்தின் பார்ட்னராக திகழும் நிலையில், அந்த நிறுவனம் ட்ரோனி என்ற பெயரில் கண்காணிப்பு ட்ரோனை அறிமுகம் செய்கிறது.
 

ms dhoni invests in garuda aerospace company and this company launches surveillance drone named droni
Author
First Published Jan 12, 2023, 4:20 PM IST

இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் தோனி, இந்திய அணிக்காக சர்வதேச கிரிக்கெட்டில் 90 டெஸ்ட், 350 ஒருநாள் மற்றும் 98 டி20 போட்டிகளில் ஆடி 16 ஆயிரத்துக்கும் அதிகமான ரன்களை குவித்துள்ளார். இந்திய அணிக்கு டி20 உலக கோப்பை(2007), ஒருநாள் உலக கோப்பை(2011) மற்றும் சாம்பியன்ஸ் டிராபி (2013) ஆகிய 3 ஐசிசி கோப்பைகளையும் வென்று கொடுத்த வெற்றிகரமான கேப்டன் தோனி.

ஐபிஎல்லில் சிஎஸ்கே அணிக்காக ஆடிவரும் தோனி, 4 முறை சிஎஸ்கே அணிக்கு கோப்பையை வென்று கொடுத்து சிஎஸ்கே அணியை வெற்றிகரமான அணியாக வழிநடத்திவரும் தோனி, 234 போட்டிகளில் ஆடி 4978 ரன்களை குவித்து, ஒரு வீரராகவும் கேப்டனாகவும் சிஎஸ்கே அணிக்கு மிகப்பெரிய பங்காற்றியுள்ளார் தோனி.

ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடரிலிருந்து அதிரடியாக விலகிய ஆஸ்திரேலிய அணி..! இதுதான் காரணம்

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்றுவிட்ட தோனி, ஐபிஎல்லில் மட்டுமே ஆடிவரும் நிலையில், கிரிக்கெட்டிலிருந்து விலகிய பின் நிறைய தொழில்களில் முதலீடு செய்து தொழிலதிபராக வளர்ந்துவருகிறார். ஏற்கெனவே மது தயாரிப்பு, சிமெண்ட் ஆலை, விவசாயம், விளம்பர நிறுவனம் என பல்வேறு வர்த்தகத்தில் கவனம் செலுத்திவரும் தோனி அடுத்ததாக ட்ரோன் பிசினஸிலும் இறங்கியுள்ளார்.

ட்ரோன்களின் முக்கியத்துவம் மற்றும் எதிர்காலத்தில் ட்ரோன்களின் பங்களிப்பு ஆகியவற்றை உணர்ந்து ட்ரோன் நிறுவனத்தில் முதலீடு செய்து கைகோர்த்துள்ளார் தோனி. சென்னையில் இயங்கிவரும் கருடா ஏரோஸ்பேஸ் என்ற நிறுவனத்தில் முதலீடு செய்துள்ள தோனி, அந்த நிறுவனத்தின் அம்பாஸடராகவும் செயல்படுகிறார்.

IND vs AUS: ஆஸி., டெஸ்ட் அணியில் 4 ஸ்பின்னர்கள்.. இந்தியாவை சமாளிக்க 4 ஆண்டுக்கு பிறகு இறக்கப்படும் வீரர்

இந்த நிறுவனம், தோனியின் பெயர் உச்சரிப்பு வரும் வகையில் Droni என்ற கண்காணிப்பு ட்ரோனை அறிமுகம் செய்துள்ளது. பேட்டரி மூலம் இயக்கப்படும் குவாட்காப்டர் கண்காணிப்பு ட்ரோன் இது. 
 

Follow Us:
Download App:
  • android
  • ios