MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Sports
  • Sports Cricket
  • IND vs AUS: ஆஸி., டெஸ்ட் அணியில் 4 ஸ்பின்னர்கள்.. இந்தியாவை சமாளிக்க 4 ஆண்டுக்கு பிறகு இறக்கப்படும் வீரர்

IND vs AUS: ஆஸி., டெஸ்ட் அணியில் 4 ஸ்பின்னர்கள்.. இந்தியாவை சமாளிக்க 4 ஆண்டுக்கு பிறகு இறக்கப்படும் வீரர்

இந்தியாவிற்கு எதிரான 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடருக்கான 18 வீரர்களை கொண்ட ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. 

2 Min read
Author : karthikeyan V
Published : Jan 12 2023, 02:38 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

ஆஸ்திரேலிய அணி பிப்ரவரி மாதம் இந்தியாவிற்கு வந்து 4 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட நீண்ட தொடரில் ஆடுகிறது. பிப்ரவரி 9 முதல் மார்ச் 22 வரை இந்த தொடர் நடக்கிறது. 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் - கவாஸ்கர் டிராபி, ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை பொறுத்தமட்டில் இந்திய அணிக்கு முக்கியமான தொடர். 75.56 சதவிகிதத்துடன் ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ள ஆஸ்திரேலிய அணி கிட்டத்தட்ட ஃபைனல் வாய்ப்பை உறுதி செய்துவிட்டது. 58.93 சதவிகிதத்துடன் 2ம் இடத்தில் இருக்கும் இந்திய அணி, ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரை 2-0 அல்லது 2-1 அல்லது 3-0 அல்லது 3-1 என வென்றால் தான் ஃபைனலுக்கு முன்னேற முடியும் என்பதால் இந்திய அணிக்கு இது முக்கியமான தொடர்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
25

இந்தியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய ஆடுகளங்களில் ஸ்பின் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால் 4 ஸ்பின்னர்கள் ஆஸ்திரேலிய அணியில் எடுக்கப்பட்டுள்ளனர். சீனியர் ஸ்பின்னர் நேதன் லயன், அஷ்டான் அகர், மிட்செல் ஸ்வெப்சன் ஆகிய மூவரும் டாட் மர்ஃபி என்ற 22 வயது இளம் ஸ்பின்னர் முதல் முறையாக ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியில் எடுக்கப்பட்டுள்ளார். ஆஸி., அணியின் வெள்ளைப்பந்து அணிகளுக்கான ஸ்பின்னர் ஆடம் ஸாம்பாவைவிட டாட் மர்ஃபி மீது நம்பிக்கை வைத்து அவருக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது.

பும்ராவின் முதுகுவலி.. இந்தியாவிற்கு தலைவலி..! நியூசி., & ஆஸி., தொடரிலிருந்தும் விலகுகிறார் பும்ரா
 

35

கேமரூன் க்ரீன் மற்றும் மிட்செல் ஸ்டார்க் ஆகிய இருவரும் கை விரல் காயம் காரணமாக முதல் டெஸ்ட் போட்டியில் ஆடமாட்டார்கள். 2வது போட்டியிலிருந்து ஆடுவார்கள். வார்னர், கவாஜா, ஸ்மித், லபுஷேன், அலெக்ஸ் கேரி, ஸ்காட் போலந்த், ஜோஷ் ஹேசில்வுட், டிராவிஸ் ஹெட் ஆகிய வழக்கமான வீரர்கள் டெஸ்ட் அணியில் இடம்பெற்றுள்ளனர்.

45

ஆஸ்திரேலியாவிற்காக 16 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 934 ரன்கள் அடித்துள்ள பீட்டர் ஹேண்ட்ஸ்கோம்ப் என்ற வீரர் 2019ம் ஆண்டு ஜனவரி மாதத்திற்கு பிறகு 4 ஆண்டுகளாக டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆடவில்லை. ஸ்பின்னர்களை திறம்பட ஆடும் ஹேண்ட்ஸ்கோம்ப், 4 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய மண்ணில் இந்திய ஸ்பின்னர்களை திறம்பட எதிர்கொள்வதற்காக ஆஸ்திரேலிய அணியில் எடுக்கப்பட்டுள்ளார்.

என் கிரிக்கெட் கெரியரில் என்னை அச்சுறுத்திய 2பவுலர்கள் இவங்கதான்; ஒருவர் இந்தியர்! ஃபாஃப் டுப்ளெசிஸ் ஓபன் டாக்

55

ஆஸ்திரேலிய டெஸ்ட் அணி:

பாட் கம்மின்ஸ் (கேப்டன்), அஷ்டான் அகர், ஸ்காட் போலந்த், அலெக்ஸ் கேரி, கேமரூன் க்ரீன், பீட்டர் ஹேண்ட்ஸ்கோம்ப், ஜோஷ் ஹேசில்வுட், டிராவிஸ் ஹெட், உஸ்மான் கவாஜா, மார்னஸ் லபுஷேன், நேதன் லயன், லான்ஸ் மோரிஸ், டாட் மார்ஃபி, மேத்யூ ரென்ஷா, ஸ்டீவ் ஸ்மித், மிட்செல் ஸ்டார்க், மிட்செல் ஸ்வெப்சன், டேவிட் வார்னர்.
 

About the Author

KV
karthikeyan V

Latest Videos
Recommended Stories
Recommended image1
ரஜினியின் வெறித்தனமான ரசிகர்! விஜய் ஸ்டைலில் கொண்டாட்டம்! வெங்கடேஷ் ஐயர் சொன்னது என்ன தெரியுமா?
Recommended image2
IPL 2026 Points Table: 2 இடங்களுக்கு 5 அணிகள் போட்டி! டாப் கியரில் ஆர்சிபி.. தத்தளிக்கும் சிஎஸ்கே!
Recommended image3
IPL 2026: CSK vs SRH: இம்பேக்ட் பிளேயராக தோனி? மேட்ச் வின்னர் கம்பேக்! சிஎஸ்கே பிளேயிங் லெவன்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved