ENG vs NZ: உலகக் கோப்பையின் அறிமுக போட்டியிலேயே 152 ரன்கள் குவித்து டெவான் கான்வே சாதனை!
இங்கிலாந்து அணிக்கு எதிரான உலகக் கோப்பையின் முதல் லீக் போட்டியில் நியூசிலாந்து வீரர் டெவான் கான்வே சதம் அடித்துள்ளார்.
ஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பையின் முதல் லீக் போட்டியில் இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதின. இந்தப் போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடந்தது. இதில், நியூசிலாந்து டாஸ் ஜெயிச்சு பந்து வீசியது. அதன்படி முதலில் விளையாடிய இங்கிலாந்து 50 ஓவர்களில் 9 விக்கெட் இழந்து 282 ரன்கள் எடுத்தது. அதில், ஜோ ரூட் அதிகபட்சமாக 77 ரன்கள் எடுத்தார்.
பின்னர் கடின இலக்கை துரத்தி நியூசிலாந்து விளையாடியது. இதில், டெவான் கான்வே மற்றும் டேவிட் மலான் இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். முதல் ஓவரில் கான்வே 10 ரன்கள் குவித்தார். 2ஆவது ஓவரின் முதல் பந்தில் மலான் கோல்டன் டக் முறையில் ஆட்டமிழந்தார். அதன் பிறகு கான்வேயுடன், ரச்சின் ரவீந்திரா இணைந்தார். இருவரும் சீரான இடைவெளியில் பவுண்டரியும், சிக்ஸருமாக விளாசித் தள்ளினர்.
ஒருபுறம் ரச்சின் ரவீந்திரா முதலில் அரைசதம் அடித்தார். அதன் பிறகு கான்வே அரைசதம் அடித்தார். அதனை சதமாகவும் மாற்றினார். அவர் 83 பந்துகளில் சதம் அடித்தார். இதன் மூலமாக 2023 ஆம் ஆண்டு உலகக் கோப்பையின் முதல் லீக் போட்டியில் சதம் அடித்த வீரர் என்ற பெருமையை பெற்றார். தொடர்ந்து அதிரடியாக விளையாடிய கான்வே, 120 பந்துகளில் 151 ரன்கள் குவித்து ஒரு நாள் கிரிக்கெட்டில் தனது அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்தார். இதற்கு முன்னதாக அதிகபட்சமாக 138 ரன்கள் எடுத்திருந்தார்.
Asian Games 2023: ஆப்பிரிக்க வம்சாவளி தடகள வீரர்களால் இந்தியாவின் பதக்கம் குறைந்ததா?
இறுதியாக அவர் 121 பந்துகளில் 19 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் உள்பட 152 ரன்கள் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்துள்ளார். இதே போன்று ரச்சின் ரவீந்திரா தனது முதல் உலகக் கோப்பை போட்டியில் 123 ரன்கள் குவித்து சாதனை படைத்துள்ளார். அவர், 96 பந்துகளில் 11 பவுண்டரி மற்றும் 5 சிக்ஸர்கள் உள்பட 123 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்துள்ளார். நியூசிலாந்து அணி 36.2 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 283 ரன்கள் குவித்து 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
சாதனைகள்:
இங்கிலாந்து அணியில்,
- உலகக் கோப்பை 2023 தொடரின் முதல் சிக்ஸர் மற்றும் பவுண்டரி அடித்த வீரர் – ஜானி பேர்ஸ்டோவ்
- இங்கிலாந்து அணியில் அதிகபட்ச ஸ்கோர் எடுத்த வீரர் – ஜோ ரூட்
- அதிக சிக்சர் அடித்த வீரர் – 2 சிக்ஸர்
- அதிக பவுண்டரி அடித்த வீரர்கள் – ஜானி பேர்ஸ்டோவ் 4, ஜோ ரூட் 4, ஹாரி ப்ரூக் 4, லியாம் லிவிங்ஸ்டன் 3.
- முதல் முறையாக அணியில் இடம் பெற்ற 11 வீரர்களும் இரட்டை இலக்க ரன்கள் குவித்துள்ளனர்.
நியூசிலாந்து அணியில்
- அதிக விக்கெட் எடுத்த வீரர் – மேட் ஹென்றி 3 விக்கெட்.
- ஒரு பவுண்டரி கூட கொடுக்காமல் பந்து வீசிய வீரர் – மிட்செல் சான்ட்னர்.
- 2023 உலகக் கோப்பை தொடரில் முதல் விக்கெட் கைப்பற்றிய வீரர் – மேட் ஹென்றி
- 2023 ஆம் ஆண்டு உலகக் கோப்பையின் முதல் போட்டியில் சதம் அடித்த முதல் வீரர் டெவான் கான்வே
- 2023 ஆம் ஆண்டு – தனது முதல் உலகக் கோப்பையின் முதல் போட்டியில் சதம் அடித்த வீரர் என்ற சாதனையை ரச்சின் ரவீந்திரா படைத்துள்ளார்.
- உலகக் கோப்பையின் முதல் போட்டியில் அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற சாதனையை டெவான் கான்வே (152 ரன்கள் நாட் அவுட்) படைத்துள்ளார்.
- நியூசிலாந்து அணியில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர் ரச்சின் ரவீந்திரா.
- நியூசிலாந்து அணியில் அதிக பவுண்டரி அடித்த வீரர் டெவான் கான்வே.
- ஒருநாள் உலகக் கோப்பையில் சதம் அடித்த இளம் (23 வயது 321 நாட்கள்) நியூசிலாந்து வீரர் என்ற பெருமையை ரச்சின் ரவீந்திரா படைத்துள்ளார்.
- 2022 டி20 உலகக் கோப்பையின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி வெற்றி பெற்றது.
- 2023 ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பையின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்தை வீழ்த்தி நியூசிலாந்து வெற்றி.
- அகமதாபாத்தில் நடந்த ஐபிஎல் 2023 இறுதிப் போட்டியில் சென்னை அணியின் சார்பில் ஆட்டநாயகன் விருது பெற்றார்.
- அகமதாபாத்தில் நடந்த 2023 உலகக் கோப்பையின் முதல் போட்டியில் சதம் விளாசி அதனை 152 ரன்கள் வரை கொண்டு சென்றுள்ளார்.
- இதுவரையில் 138 ரன்கள் மட்டுமே அதிகபட்ச ஸ்கோராக இருந்தது. தற்போது 152 ரன்கள் நாட் அவுட்டை தனது அதிகபட்ச ஸ்கோராக பதிவு செய்துள்ளார்.
-
உலகக் கோப்பையில் அறிமுக போட்டியில் சதம் அடித்த சீனியர் வீரர்களின் பட்டியலில் கான்வே இணைந்துள்ளார். அவர், 32 வயது 89 நாட்களில் (உலகக் கோப்பை முதல் போட்டி) இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
-
குறைவான இன்னிங்ஸ்களில் 1000 ரன்களை கடந்த வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். 22 இன்னிங்ஸ்களில் 1000 ரன்களுக்கு மேல் எடுத்துள்ளார்.
- Ahmedabad
- All Teams World Cup Squad 2023
- Circket news in tamil
- Devon Conway
- ENG vs NZ
- England vs New Zealand
- England vs New Zealand 1st Match
- Glenn Phillips
- Harry Brook
- ICC Cricket World Cup 2023
- ICC ODI World Cup 2023
- India World Cup Squad
- James Neesham
- Joe Root
- Jonny Bairstow
- Jos Butler
- Matt Henry
- Mitchell Santner
- Rachin Ravindra
- World Cup
- World Cup 1st Match
- World Cup 2023
- World Cup 2023 News