Asianet News TamilAsianet News Tamil

டி20 உலக கோப்பை: சூப்பர் 12 சுற்றின் முதல் போட்டியில் நியூசிலாந்திடம் படுதோல்வி அடைந்தது ஆஸ்திரேலியா

டி20 உலக கோப்பையில் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான முதல் சூப்பர் 12 சுற்று போட்டியில் நியூசிலாந்து அணி 89 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
 

new zealand beat australia by 89 runs in first super 12 match in t20 world cup
Author
First Published Oct 22, 2022, 4:15 PM IST

டி20 உலக கோப்பை சூப்பர் 12 சுற்றின் முதல் போட்டியில் ஆஸ்திரேலியா - நியூசிலாந்து அணிகள் மோதின. சிட்னியில் நடந்த இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.

ஆஸ்திரேலிய அணி:

ஆரோன் ஃபின்ச் (கேப்டன்), டேவிட்  வார்னர், மிட்செ ல் மார்ஷ், க்ளென் மேக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டோய்னிஸ், டிம் டேவிட், மேத்யூ வேட் (விக்கெட் கீப்பர்), பாட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், ஆடம் ஸாம்பா, ஜோஷ் ஹேசில்வுட்.

இதையும் படிங்க- டி20 உலக கோப்பை: தினேஷ் கார்த்திக் வேண்டாம்.. ரிஷப் பண்ட் தான் சரியாக இருப்பார்.! கம்பீர் கூறும் சரியான காரணம்

நியூசிலாந்து அணி:

டெவான் கான்வே (விக்கெட் கீப்பர்), ஃபின் ஆலன், கேன் வில்லியம்சன் (கேப்டன்), க்ளென் ஃபிலிப்ஸ், மார்க் சாப்மேன், ஜேம்ஸ் நீஷம், மிட்செல் சாண்ட்னெர், டிம் சௌதி, இஷ் சோதி, லாக்கி ஃபெர்குசன், டிரெண்ட் போல்ட்.

முதலில் பேட்டிங் ஆடிய நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர்களாக ஃபின் ஆலன் மற்றும் டெவான் கான்வே ஆகிய இருவரும் களமிறங்கினர். அதிரடியாக ஆடிய ஃபின் ஆலன் 16 பந்தில் 5 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 42 ரன்களை விளாசினார். 

கேப்டன் கேன் வில்லியம்சன் 23 பந்தில் 23 ரன்கள் மட்டுமே அடித்தார். அதிரடியாக ஆடி அரைசதம் அடித்த டெவான் கான்வே அதன்பின்னர் அடி  வெளுத்து வாங்கினார். க்ளென் ஃபிலிப்ஸ் 12 ரன்னில் ஆட்டமிழந்தார். டெவான் கான்வேவும் ஜிம்மி நீஷமும் இணைந்து டெத் ஓவர்களில் அடித்து ஆடி ஸ்கோரை  மேலும் உயர்த்தினர். ஜிம்மி நீஷம் 13 பந்தில் 26 ரன்கள் அடித்தார். அபாரமாக பேட்டிங் ஆடி சதத்தை நெருங்கிய டெவான் கான்வே 58 பந்தில் 7 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் 92 ரன்களை குவித்து கடைசிவரை ஆட்டமிழக்காதபோதிலும், அவரால் சதத்தை எட்டமுடியவில்லை. 20 ஓவரில் 200 ரன்களை குவித்தது நியூசிலாந்து அணி.

201 ரன்கள் என்ற கடின இலக்கை விரட்டிய ஆஸ்திரேலிய அணி வீரர்கள் தொடக்கம் முதலே சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்து வெளியேறினர். வார்னர் 5 ரன்னில் டிம் சௌதியின் பந்தில் ஆட்டமிழக்க, கேப்டன் ஃபின்ச் 13 ரன்களுக்கு சாண்ட்னெரின் சுழலில் வீழ்ந்தார். மிட்செல் மார்ஷும் 16 ரன்களுக்கு டிம் சௌதியின் பவுலிங்கில் ஆட்டமிழந்தார்.

அதன்பின்னர் ஓரளவிற்கு நம்பிக்கையளித்த க்ளென் மேக்ஸ்வெல்லும் 28 ரன்களுக்கு இஷ் சோதியின் பவுலிங்கில் நடையை கட்டினார். மார்கஸ் ஸ்டோய்னிஸ்(7), டிம் டேவிட் (11), மேத்யூ வேட்(2) ஆகியோரும் சொற்ப ரன்களுக்கு வெளியேறி ஏமாற்றமளித்தனர்.  மிட்செல் ஸ்டார்க் (4), ஸாம்பா (0) ஆகிய இருவரையும் டிரெண்ட் போல்ட் போல்டாக்கி அனுப்ப, கடைசி விக்கெட்டாக பாட் கம்மின்ஸும் (21) டிம் சௌதியிடம் விழ, 17.1 ஓவரில் 111 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

இதையும் படிங்க - டி20 உலக கோப்பை: இந்திய அணியின் வலுவான ஆடும் லெவன்..! கௌதம் கம்பீரின் தேர்வு

89 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி, மிகப்பெரிய வெற்றியுடன் இந்த உலக கோப்பையை தொடங்கியுள்ளது.
 

Follow Us:
Download App:
  • android
  • ios