Asianet News TamilAsianet News Tamil

டி20 உலக கோப்பை: இந்திய அணியின் வலுவான ஆடும் லெவன்..! கௌதம் கம்பீரின் தேர்வு

டி20 உலக கோப்பையில் களமிறங்கும் இந்திய அணியின் வலுவான ஆடும் லெவனை கௌதம் கம்பீர் தேர்வு செய்துள்ளார்.
 

gautam gambhir picks team india strongest eleven for t20 world cup
Author
First Published Oct 21, 2022, 8:41 PM IST

டி20 உலக கோப்பை தகுதிச்சுற்று முடிந்த நிலையில் நாளை முதல் சூப்பர் 12 சுற்று போட்டிகள் தொடங்குகின்றன. 23ம் தேதி மெல்பர்னில் இந்தியாவும் பாகிஸ்தானும் மோதுகின்றன. தகுதிச்சுற்றில் வெற்றி பெற்ற ஜிம்பாப்வே மற்றும் நெதர்லாந்து அணிகள் இந்தியா இடம்பெற்றுள்ள க்ரூப் 2-ல் இடம்பிடித்துள்ளன. 

எனவே இந்திய அணி டி20 உலக கோப்பை சூப்பர் 12 சுற்றில் பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா, வங்கதேசம், ஜிம்பாப்வே, நெதர்லாந்து ஆகிய அணிகளை எதிர்கொள்கிறது.

இதையும் படிங்க - டி20 உலக கோப்பை: சூப்பர் 12 சுற்றில் இந்திய அணி எதிர்கொள்ளும் அணிகள் இவைதான்.! முழு போட்டி விவரம்

டி20 உலக கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள அணியாக பார்க்கப்படும் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி தீவிரமாக தயாராகிவருகிறது. ஆஸ்திரேலியாவில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளது. இந்திய அணியின் ஆடும் லெவன் ஏற்கனவே உறுதி செய்யப்பட்டுவிட்டதாக கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.

ரோஹித், ராகுல், கோலி, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, தினேஷ் கார்த்திக் - இதுதான் பேட்டிங் ஆர்டர் என்பது உறுதியாகிவிட்டது. தினேஷ் கார்த்திக் - ரிஷப் பண்ட் இருவரில் யார் ஆடுவது, புவனேஷ்வர் குமார், ஷமி, ஹர்ஷல் படேல், அர்ஷ்தீப் சிங் ஆகிய நால்வரில் மூவர் தான் ஆடமுடியும் என்ற நிலையில் அந்த மூவர் யார் யார் என்பது குறித்தெல்லாம் பேசியுள்ள கம்பீர், இந்திய அணியின் ஆடும் லெவனை தேர்வு செய்துள்ளார்.

இதுகுறித்து பேசியுள்ள கௌதம் கம்பீர், 10 பந்துகள் மட்டுமே பேட்டிங் ஆடும் தினேஷ் கார்த்திக்கைவிட ரிஷப் பண்ட் தான் சரியான தேர்வு. ரிஷப் பண்ட் 5ம் வரிசையிலும், ஹர்திக் பாண்டியா 6ம் வரிசையிலும் ஆடவேண்டும். அக்ஸர் படேல் 7ம் வரிசையில் ஆடலாம். ஹர்திக் பாண்டியா 6வது ஃபாஸ்ட் பவுலிங் ஆப்சன்; 4வது ஃபாஸ்ட் பவுலர். 3 ஃபாஸ்ட் பவுலர்களை எடுக்க வேண்டும். முகமது ஷமி என்னுடைய முதல் தேர்வு. அடுத்தது ஹர்ஷல் படேல், 3வது பவுலராக புவனேஷ்வர் குமார் - அர்ஷ்தீப் சிங் இருவரில் ஒருவரைத்தான் எடுக்க வேண்டும் என்று கம்பீர் கூறியுள்ளார்.

இதையும் படிங்க - வாய்ச்சொல் வீரன் பாகிஸ்தானை பயங்கரமா பங்கம் செய்த இந்திய முன்னாள் வீரர்.!

கௌதம் கம்பீர் தேர்வு செய்த இந்திய அணியின் வலுவான ஆடும் லெவன்:

ரோஹித் சர்மா (கேப்டன்), கேஎல் ராகுல், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, அக்ஸர் படேல், ஹர்ஷல் படேல், முகமது ஷமி, புவனேஷ்வர் குமார்/அர்ஷ்தீப் சிங், யுஸ்வேந்திர சாஹல்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios