இங்கிலாந்து - நெதர்லாந்து இடையேயான முதல் ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து வீரர்கள் அடித்து பறக்கவிட்ட பந்துகளை மரங்களுக்கு இடையே சென்று நெதர்லாந்து வீரர்களும் பாதுகாப்பு அதிகாரிகளும் தேடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது. 

இங்கிலாந்து அணி நெதர்லாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் போட்டிகளில் ஆடிவருகிறது. முதல் ஒருநாள் போட்டி நேற்று நடந்தது. 

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இங்கிலாந்து அணி 498 ரன்களை குவித்து, சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்து வரலாற்று சாதனை படைத்தது. வெறும் இரண்டே ரன்னில் 500 ரன்களை தவறவிட்டது.

ஃபிலிப் சால்ட்(122), டேவிட் மலான் (125) மற்றும் ஜோஸ் பட்லர் (162) ஆகிய மூவரின் அபார சதம் மற்றும் லியாம் லிவிங்ஸ்டோனின் அதிரடி அரைசதம் (22 பந்தில் 66 ரன்கள்) ஆகியவற்றால் 50 ஓவரில் 498 ரன்களை குவித்து சாதனை படைத்தது இங்கிலாந்து அணி.

499 ரன்கள் என்ற சாத்தியமே இல்லாத இலக்கை விரட்டிய நெதர்லாந்து அணியை 266 ரன்களுக்கு சுருட்டி 232 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது இங்கிலாந்து அணி.

இந்த போட்டியில் இங்கிலாந்து அணி மொத்தமாக 26 சிக்ஸர்களை விளாசியது. இங்கிலாந்து வீரர் டேவிட் மலான் அடித்த சிக்ஸரில் பந்து மைதானத்திற்கு வெளியே இருந்த மரங்களுக்குள் விழுந்துவிட்டது. அந்த பந்தை நெதர்லாந்து வீரர்கள், மைதான ஊழியர்கள், செக்யூரிட்டி அதிகாரிகள் இணைந்து தேடினர். ஸ்ட்ரீட் கிரிக்கெட்டில் பசங்க பந்தை தேடுவதுபோல், நெதர்லாந்துவீரர்கள் பந்தை தேடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.

Scroll to load tweet…