டி20 உலக கோப்பை: தகுதிப்போட்டியில் ஐக்கிய அரபு அமீரகத்தை வீழ்த்தி நெதர்லாந்து வெற்றி

டி20 உலக கோப்பை தகுதிப்போட்டியில் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு எதிரான போட்டியில் 3 விக்கெட் வித்தியாசத்தில் நெதர்லாந்து அணி வெற்றி பெற்றது.
 

netherlands beat united arab emirates in t20 world cup match

டி20 உலக கோப்பை தொடரின் தகுதிப்போட்டிகள் இன்று தொடங்கின. வரும் 21ம் தேதி வரை தகுதிப்போட்டிகளும் அதன்பின்னர் சூப்பர் 12 சுற்று போட்டிகளும் நடக்கின்றன.

இன்று க்ரூப் ஏவில் இடம்பெற்றுள்ள 4 அணிகளுக்கு இடையே தகுதிப்போட்டிகள் நடந்தன. முதல் போட்டியில் இலங்கையும் நமீபியாவும் மோதின. அந்த போட்டியில் 55 ரன்கள் வித்தியாசத்தில் நமீபியா அணி அபார வெற்றி பெற்றது.

இதையும் படிங்க - டி20 உலக கோப்பை: பாகிஸ்தானுக்கு எதிராக களமிறங்கும் இந்திய அணி இதுதான்..! கேப்டன் ரோஹித் அதிரடி

ஜீலாங்கில் நடந்த அடுத்த போட்டியில் ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் நெதர்லாந்து அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஐக்கிய அரபு அமீரக அணி முதலில் பேட்டிங் ஆடியது. அமீரக அணியில் தொடக்க வீரர் முகமது வாசிம் நன்றாக ஆடி அதிகபட்சமாக 41 ரன்கள் அடித்தார். மற்ற வீரர்கள் அனைவருமே சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்ததால் 20 ஓவரில் 111 ரன்கள் மட்டுமேஅடித்தது அமீரக அணி.

இதையும் படிங்க -  டி20 உலக கோப்பை: நமீபியாவிடம் படுதோல்வி அடைந்த ஆசிய சாம்பியன் இலங்கை

112 ரன்கள் என்ற எளிய இலக்கை விரட்டிய நெதர்லாந்து அணி கடைசி ஓவரில் 5வது பந்தில் அடித்து 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.  இந்த வெற்றி நெதர்லாந்து அணிக்கு சிறப்பான வெற்றி. க்ரூப் ஏவில் இடம்பெற்றுள்ள 4 அணிகளில் முதலிரண்டு இடங்களை பிடிக்கும் அணிகளே சூப்பர் 12 சுற்றுக்கு முன்னேறும் என்பதால், நெதர்லாந்து அணிக்கு இந்த வெற்றி சூப்பர் 12 சுற்று வாய்ப்பை வலுவாக்கும் வெற்றியாகும்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios