Asianet News TamilAsianet News Tamil

டி20 உலக கோப்பைக்கான இங்கிலாந்து அணியின் வலுவான ஆடும் லெவன்..! முன்னாள் கேப்டன் நாசர் ஹுசைனின் அதிரடி தேர்வு

டி20 உலக கோப்பையில் களமிறங்க இங்கிலாந்து அணியின் வலுவான ஆடும் லெவன் காம்பினேஷனை தேர்வு செய்துள்ளார் நாசர் ஹுசைன்.
 

nasser hussain picks england team ideal playing eleven for t20 world cup
Author
First Published Sep 24, 2022, 6:20 PM IST

டி20 உலக கோப்பை தொடர் வரும் அக்டோபர் 16 முதல் நவம்பர் 13 வரை ஆஸ்திரேலியாவில் நடக்கிறது.     இந்த டி20 உலக கோப்பைக்காக அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகிவருகின்றன. 

டி20 உலக கோப்பைக்கான அனைத்து அணிகளும் அறிவிக்கப்பட்டுவிட்டன. இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள அணிகளாக பார்க்கப்படும் அதேவேளையில், பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து ஆகிய அணிகளும் வலுவாக இருப்பதால் போட்டி கடுமையாக இருக்கும்.

இதையும் படிங்க - அந்த விஷயத்துல மத்தவன்லாம் வெத்து.. நான் தான்டா கெத்து..! சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ரோஹித் சர்மா அபார சாதனை

இந்த டி20 உலக கோப்பைக்கான வலுவான ஆடும் லெவன் காம்பினேஷனை அந்தந்த நாடுகளை சேர்ந்த முன்னாள் வீரர்கள் தேர்வு செய்துவருகின்றனர். அந்தவகையில், இங்கிலாந்து அணியின் வலுவான ஆடும் லெவன் காம்பினேஷனை முன்னாள் கேப்டன் நாசர் ஹுசைன் தேர்வு செய்துள்ளார்.

தொடக்க வீரர்களாக அலெக்ஸ் ஹேல்ஸ் - ஜோஸ் பட்லர் ஆகிய இருவரையும், 3ம் வரிசையில் டேவிட் மலான், 4ம் வரிசையில் பென் ஸ்டோக்ஸ் ஆகியோரையும் தேர்வு செய்துள்ள நாசர் ஹுசைன், 5ம் வரிசை வீரராக ஹாரி ப்ரூக்கை தேர்வு செய்துள்ளார்.                                 

6 மற்றும் 7ம் வரிசைகளில் மொயின் அலி மற்றும் லியாம் லிவிங்ஸ்டோன் ஆகிய இருவரையும் தேர்வு செய்துள்ளார். ஃபாஸ்ட் பவுலர்களாக மார்க் உட் மற்றும் ரீஸ் டாப்ளி ஆகிய இருவரையும், ஃபாஸ்ட் பவுலிங் ஆல்ரவுண்டர் சாம் கரனையும் தேர்வு செய்துள்ளார் நாசர் ஹுசைன். ஸ்பின்னராக ரிஸ்ட் ஸ்பின்னர் அடில் ரஷீத்தை தேர்வு செய்துள்ளார்.

நாசர் ஹுசைன் தேர்வு செய்திருப்பது செம பேலன்ஸான, வலுவான காம்பினேஷன். மார்க் உட், ரீஸ் டாப்ளி ஆகிய இருவரும் ஃபாஸ்ட் பவுலர்கள். இவர்களுடன் பென் ஸ்டோக்ஸ் மற்றும் சாம் கரன் ஆகிய இருவரும் மிதவேகப்பந்துவீச்சு வீசுவார்கள். 

மொயின் அலி, அடில் ரஷீத் ஆகிய இருவரும் மெயின் ஸ்பின்னர்கள். லிவிங்ஸ்டோனும் ஸ்பின் பவுலிங் வீசுவார். எனவே மொத்தம் 7 பவுலிங் ஆப்சன் உள்ளது. அதேபோலவே 8ம் வரிசை வீரராக சாம் கரன் இறங்குவதால் பேட்டிங் டெப்த்தும் சிறப்பாக உள்ளது.

இதையும் படிங்க - T20 World Cup:ரிஷப் பண்ட் - தினேஷ் கார்த்திக் இந்திய அணியில் யாருக்கு இடம்? கவாஸ்கர் - ஹைடன் முரண்பட்ட கருத்து

நாசர் ஹுசைன் தேர்வு செய்த இங்கிலாந்து அணியின் ஆடும் லெவன்:
    
அலெக்ஸ் ஹேல்ஸ், ஜோஸ் பட்லர் (கேப்டன், விக்கெட் கீப்பர்), டேவிட் மலான், பென் ஸ்டோக்ஸ், ஹாரி ப்ரூக், மொயின் அலி, லியாம் லிவிங்ஸ்டோன், சாம் கரன், மார்க் உட், ரீஸ் டாப்ளி, அடில் ரஷீத்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios