நேபாள் அணிக்கு எதிரான முத்தரப்பு டி20 தொடரில் நமீபியா வீரர் லோஃப்டி ஈடன் 33 பந்துகளில் சதம் அடித்து ரொகித் சர்மாவின் சாதனையை முறியடித்துள்ளார்.
நேபாள், நமீபியா மற்றும் நெதர்லாந்து அணிகளுக்கு இடையிலான முத்தரப்பு டி20 தொடரானது நேபாளில் இன்று தொடங்கியது. இதில், இன்று நடந்த முதல் போட்டியில் நேபாள் மற்றும் நமீபியா அணிகள் மோதின. இதில், டாஸ் வென்ற நமீபியா முதலில் பேட்டிங் செய்தது. மைக்கேல் வான் லிங்கன் மற்றும் மாலன் க்ரூகர் இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இதில், லிங்கன் 20 ரன்களில் ஆட்டமிழக்க, ஜேபி கோட்ஸே களமிறங்கினார். இவர், நீண்ட நேரம் நீடிக்கவில்லை.
மகள் வாமிகா உடன் லண்டன் ரெஸ்டாரண்டில் உலா வரும் விராட் கோலி – வைரலாகும் புகைப்படம்!
கடைசியாக லோஃப்டி 36 பந்துகளில் 11 பவுண்டரி, 8 சிக்ஸர்கள் உள்பட 101 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இறுதியாக நமீபியா 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 206 ரன்கள் குவித்தது. பின்னர் விளையாடிய நேபாள் 186 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 20 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்துள்ளது.
இவரைத் தொடர்ந்து ஜான் ஃப்ரைலிங்க் களமிறங்கினார். இவரும் பெரிதாக சோபிக்காத நிலையில், ஜான் நிகோல் லோஃப்டி-ஈடன் களமிறங்கினார். தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடிய லோஃப்டி ஈடன் 18 பந்துகளில் 51 ரன்கள் குவித்தார். அதன் பிறகு தொடர்ந்து சிக்ஸரும், பவுண்டரியுமாக விளையாசிய ஈடன் 30 பந்துகளில் 90 ரன்கள் எடுத்திருந்த நிலையில், 6, 0, 4 அடித்து டி20 கிரிக்கெட்டில் 33 பந்துகளில் 100 ரன்கள் அடித்து ரோகித் சர்மாவின் சாதனையை முறியடித்துள்ளார்.
இந்திய டெஸ்ட் வீரர்களுக்கு சம்பளத்துடன் போனஸையும் கொடுக்க முடிவு செய்த பிசிசிஐ!
இதற்கு முன்னதாக 34 பந்துகளில் சதம் அடித்து கௌசல் மல்லா அதிவேகமாக சதம் அடித்தவர்களின் பட்டியலில் முதலிடத்தில் இருந்தார். இவரைத் தொடர்ந்து தென் ஆப்பிரிக்கா வீரர் டேவிட் மில்லர் (35 பந்துகள்) 2ஆவது இடத்திலும், ரோகித் சர்மா (35 பந்துகள்) 3ஆவது இடத்திலும் இடம் பெற்றிருந்தனர். இந்த நிலையில் தான் இந்தப் போட்டியில் 33 பந்துகளில் சதம் அடித்ததன் மூலமாக எல்லோரது சாதனையையும் முறியடித்து புதிய வரலாற்று சாதனை படைத்துள்ளார். அதுமட்டுமின்றி அதிவேகமாக சதம் அடித்தவர்களின் பட்டியலில் நம்பர் 1 இடம் பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Shami Surgery: அறுவை சிகிச்சை செய்து கொண்ட முகமது ஷமி – மருத்துவமனையில் இருக்கும் புகைப்படம் வைரல்!

