IPL 2023: வாழ்வா சாவா போட்டியில் சன்ரைசர்ஸை எதிர்கொள்ளும் மும்பை இந்தியன்ஸ்..! டாஸ் ரிப்போர்ட்
ஐபிஎல் 16வது சீசனில் பிளே ஆஃபிற்கு முன்னேற வெற்றி கட்டாயத்தில் கடைசி லீக் போட்டியில் சன்ரைசர்ஸை எதிர்கொள்ளும் மும்பை இந்தியன்ஸ் அணி டாஸ் வென்று ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.
ஐபிஎல் 16வது சீசன் லிக் சுற்று போட்டிகள் இன்று முடிகின்றன. குஜராத் டைட்டன்ஸ், சிஎஸ்கே, லக்னோ அணிகள் பிளே ஆஃபிற்கு முன்னேறிவிட்ட நிலையில், கடைசி இடத்திற்கு மும்பை இந்தியன்ஸ் மற்றும் ஆர்சிபி அணிகளுக்கு இடையே போட்டி நிலவுகிறது.
இன்று அந்த 2 அணிகளுக்குமே போட்டிகள் இருக்கின்றன. பிற்பகல் 3.30 மணிக்கு நடக்கும் போட்டியில் மும்பை இந்தியன்ஸும் ரன்சரைசர்ஸும் மோதுகின்றன. இரவு நடக்கும் போட்டியில் ஆர்சிபி - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன.
மும்பை இந்தியன்ஸ் மற்றும் ஆர்சிபி அணிகளில் ஜெயிக்கும் அணி பிளே ஆஃபிற்கு முன்னேறும். ஒருவேளை 2 அணிகளுமே ஜெயிக்கும் பட்சத்தில், நெட் ரன்ரேட் அடிப்படையில் ஒரு அணி முன்னேறும்.
அந்தவகையில், பிளே ஆஃபிற்கு முன்னேற கண்டிப்பாக வெற்றி பெற்றே தீர வேண்டிய கட்டாயத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி, சன்ரைசர்ஸை எதிர்கொள்கிறது. மும்பை வான்கடேவில் நடக்கும் இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.
மும்பை இந்தியன்ஸ் அணி:
ரோஹித் சர்மா (கேப்டன்), இஷான் கிஷன், கேமரூன் க்ரின், சூர்யகுமார் யாதவ், டிம் டேவிட், நெஹல் வதேரா, கிறிஸ் ஜோர்டான், பியூஷ் சாவ்லா, ஜேசன் பெஹ்ரண்டார்ஃப், குமார் கார்த்திகேயா, ஆகாஷ் மத்வால்.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி:
மயன்க் அகர்வால், விவ்ராந்த் சர்மா, ஐடன் மார்க்ரம் (கேப்டன்), ஹென்ரிச் கிளாசன், ஹாரி ப்ருக், நிதிஷ் ரெட்டி, க்ளென் ஃபிலிப்ஸ், சன்வீர் சிங், மயன்க் தாகர், புவனேஷ்வர் குமார், உம்ரான் ம்ராலிக்.