ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் ரோஹித் சர்மா ஃபீல்டிங்கை தேர்வு செய்தார். 

ஐபிஎல் 15வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இன்று 2 போட்டிகள் நடக்கின்றன. பிற்பகல் 3.30 மணிக்கு நடக்கும் போட்டியில் மும்பை இந்தியன்ஸும் ராஜஸ்தான் ராயல்ஸும் மோதுகின்றன. 

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதல் போட்டியில் சன்ரைசர்ஸை வீழ்த்தி வெற்றி பெற்ற நிலையில், வெற்றியை தொடரும் முனைப்பில் அந்த அணி களமிறங்குகிறது. முதல் போட்டியில் டெல்லி கேபிடள்ஸிடம் தோற்ற மும்பை இந்தியன்ஸ் அணி, இந்த போட்டியில் முதல் வெற்றியை பதிவு செய்யும் முனைப்பில் களமிறங்குகிறது.

மும்பை டி.ஒய்.பாட்டீல் மைதானத்தில் நடக்கும் இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோஹித் சர்மா ஃபீல்டிங்கை தேர்வு செய்தார்.

மும்பை இந்தியன்ஸ் அணியின் ஆடும் லெவனில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. காயத்திலிருந்து மீண்டு மும்பை அணியுடன் இணைந்த சூர்யகுமார் யாதவ் இந்த போட்டியில் ஆடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் ஆடவில்லை. அதனால் அணி காம்பினேஷனில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

மும்பை இந்தியன்ஸ் அணி:

ரோஹித் சர்மா (கேப்டன்), இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), அன்மோல்ப்ரீத் சிங், திலக் வர்மா, கைரன் பொல்லார்டு, டிம் டேவிட், டேனியல் சாம்ஸ், முருகன் அஷ்வின், ஜஸ்ப்ரித் பும்ரா, டைமல் மில்ஸ், பாசில் தம்பி.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி:

ஜோஸ் பட்லர், யஷஸ்வி ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன் (கேப்டன், விக்கெட் கீப்பர்), தேவ்தத் படிக்கல், ஷிம்ரான் ஹெட்மயர், ரியான் பராக், ரவிச்சந்திரன் அஷ்வின், யுஸ்வேந்திர சாஹல், டிரெண்ட் போல்ட், நவ்தீப் சைனி, பிரசித் கிருஷ்ணா.