IPL 2023: DC vs MI டாஸ் ரிப்போர்ட்! MI-யில் ஆர்ச்சர் ஆடல.. DC-யில் 2 அதிரடி மாற்றங்கள்! முதல் வெற்றி யாருக்கு?
ஐபிஎல் 16வது சீசனில் டெல்லி கேபிடள்ஸுக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோஹித் சர்மா ஃபீல்டிங்கை தேர்வு செய்தார்.
ஐபிஎல் 16வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவரும் நிலையில், இந்த சீசனில் இதுவரை ஆடியதில் ஒரு வெற்றியைக் கூட பெறாத 2 அணிகளான டெல்லி கேபிடள்ஸும் மும்பை இந்தியன்ஸும் இன்று மோதுகின்றன.
டெல்லி அருண் ஜேட்லி ஸ்டேடியத்தில் நடக்கும் இந்த போட்டியில் டெல்லி கேபிடள்ஸுக்கு எதிராக டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோஹித் சர்மா ஃபீல்டிங்கை தேர்வு செய்தார்.
மும்பை இந்தியன்ஸ் அணியில் இந்த போட்டியிலும் மிரட்டலான ஃபாஸ்ட் பவுலர் ஜோஃப்ரா ஆர்ச்சர் ஆடவில்லை. ஏற்கனவே பும்ராவை இழந்து தவித்துவரும் மும்பைஅணி, ஆர்ச்சரை வைத்து பும்ராவின் இழப்பை ஈடுகட்டும் முனைப்பில் இருந்த நிலையில், ஆர்ச்சரும் ஆடாதது பெரும் பின்னடைவு.
IPL 2023: மும்பை இந்தியன்ஸின் பெரிய பிரச்னையே அதுதான்..! கரெக்ட்டா சுட்டிக்காட்டிய கவாஸ்கர்
டெல்லி கேபிடள்ஸ் அணியில் 2 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. கலீல் அகமதுவுக்கு பதிலாக யஷ் துல் மற்றும் ரைலீ ரூசோவுக்கு பதிலாக முஸ்தாஃபிசுர் ரஹ்மான் சேர்க்கப்பட்டுள்ளனர்.
டெல்லி கேபிடள்ஸ் அணி:
பிரித்வி ஷா, டேவிட் வார்னர் (கேப்டன்), மனீஷ் பாண்டே, யஷ் துல், ரோவ்மன் பவல், லலித் யாதவ், அக்ஸர் படேல், அபிஷேக் போரெல், குல்தீப் யாதவ், அன்ரிக் நோர்க்யா, முஸ்தாஃபிசுர் ரஹ்மான்.
IPL 2023: ஆர்சிபியை அலறவிட்டு நிகோலஸ் பூரன் ஐபிஎல்லில் படைத்த சாதனைகள்
மும்பை இந்தியன்ஸ் அணி:
ரோஹித் சர்மா (கேப்டன்), இஷான் கிஷன், கேமரூன் க்ரீன், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, நெஹால் வதேரா, ரித்திக் ஷோகீன், ரைலீ மெரிடித், அர்ஷத் கான், பியூஷ் சாவ்லா, ஜேசன் பெஹ்ரண்டார்ஃப்.