Asianet News TamilAsianet News Tamil

ஐபிஎல் வரலாற்றில் சிஎஸ்கேவை வச்சு தரமான சம்பவம் செய்த மும்பை இந்தியன்ஸ்!! தோனி&கோவிற்கு இதைவிட ஒரு அசிங்கம் வேணுமா..?

ஐபிஎல்லில் அனைத்து அணிகளின் மீதும் ஆதிக்கம் செலுத்தி ஆடும் சிஎஸ்கேவால் மும்பை இந்தியன்ஸின் மீது மட்டும் ஆதிக்கம் செலுத்த முடியவில்லை. அதற்கு மும்பை இந்தியன்ஸ் அணி அனுமதித்ததும் இல்லை. மும்பை இந்தியன்ஸ் அணி வென்ற 3 ஐபிஎல் கோப்பைகளில் 2 சிஎஸ்கேவை இறுதி போட்டியில் வீழ்த்தி வெல்லப்பட்டதாகும். 
 
mumbai indians great record against csk in ipl
Author
India, First Published May 8, 2019, 11:01 AM IST

தலா 3 முறை கோப்பையை வென்று ஐபிஎல் வரலாற்றில் வெற்றிகரமான அணிகளாகவும் கடும் போட்டியாளர்களாகவும் திகழும் அணிகள் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சிஎஸ்கே. 

தோனி தலைமையிலான சிஎஸ்கே அணி ஐபிஎல் தொடங்கியதிலிருந்தே ஆதிக்கம் செலுத்திவருகிறது. 2010, 2011, 2018 ஆகிய மூன்று சீசன்களிலும் சிஎஸ்கே கோப்பையை வென்றுள்ளது. 2013, 2015, 2017 ஆகிய மூன்று சீசன்களிலும் மும்பை இந்தியன்ஸ் கோப்பையை வென்றது. 

ஐபிஎல்லில் அனைத்து அணிகளின் மீதும் ஆதிக்கம் செலுத்தி ஆடும் சிஎஸ்கேவால் மும்பை இந்தியன்ஸின் மீது மட்டும் ஆதிக்கம் செலுத்த முடியவில்லை. அதற்கு மும்பை இந்தியன்ஸ் அணி அனுமதித்ததும் இல்லை. மும்பை இந்தியன்ஸ் அணி வென்ற 3 ஐபிஎல் கோப்பைகளில் 2 சிஎஸ்கேவை இறுதி போட்டியில் வீழ்த்தி வெல்லப்பட்டதாகும். 

mumbai indians great record against csk in ipl

இந்த சீசனில் லீக் சுற்றில் இரண்டு போட்டிகள் மற்றும் நேற்று நடந்த பிளே ஆஃப் போட்டி ஆகிய மூன்றிலுமே சிஎஸ்கேவை வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் வென்றது. கடந்த சீசனில் இரு அணிகளும் 2 முறை மோதியதில் முதல் போட்டியில் சிஎஸ்கேவும் இரண்டாவது போட்டியில் மும்பை இந்தியன்ஸும் வெற்றி பெற்றன. 

கடந்த சீசனில் இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது போட்டி மற்றும் இந்த சீசனில் தொடர்ச்சியாக 3 போட்டிகள் ஆகியவற்றில் வென்றதன் மூலம் சிஎஸ்கே அணியை தொடர்ச்சியாக 4 போட்டிகளில் வீழ்த்திய அணி என்ற சாதனையையும் பெருமையும் மும்பை இந்தியன்ஸ் பெற்றுள்ளது. இதுவரை வேறு எந்த அணியுமே சிஎஸ்கேவை தொடர்ச்சியாக 4 போட்டிகளில் வீழ்த்தியதில்லை. 

mumbai indians great record against csk in ipl

அதுமட்டுமல்லாமல் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் கடைசியாக சிஎஸ்கே ஆடியுள்ள 21 போட்டிகளில் மூன்றில் மட்டுமே தோற்றுள்ளது. அந்த 3 தோல்விகளுமே மும்பை இந்தியன்ஸிடம் தான். இது சிஎஸ்கேவின் ஐபிஎல் வரலாற்றில் மோசமான சம்பவம். 
 
Follow Us:
Download App:
  • android
  • ios