ரோஹித் சர்மாவின் தலைமையில் 2013, 2015, 2017, 2019 ஆகிய நான்கு சீசன்களில் ஐபிஎல் கோப்பையை வென்றது. ஹர்திக் பாண்டியா, பும்ரா போன்ற திறமைகளை அடையாளம் காட்டிய மும்பை இந்தியன்ஸ் அணி, 2018 சீசனில் மயன்க் மார்கண்டே என்ற ஸ்பின்னரை எடுத்தது. அவர் 2018 சீசனில் நன்றாக ஆடினார். 

ஆனால் 2019 சீசனில் அவருக்கு பெரிதாக வாய்ப்பளிக்கப்படவில்லை. அவரும் சரியாக ஆடவில்லை. ஆனால் அவரது இடத்தை அபாரமாக பந்துவீசிய ராகுல் சாஹர் கைப்பற்றிவிட்டார். 2019 சீசனில் அபாரமாக வீசிய ராகுல் சாஹர், வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான டி20 அணியிலும் எடுக்கப்பட்டுள்ளார். 

இந்நிலையில், மயன்க் மார்கண்டேவை டெல்லி கேபிடள்ஸ் அணிக்கு கொடுத்துவிட்டு அந்த அணியில் ஆடிவந்த ரூதர்ஃபோர்டை மும்பை இந்தியன்ஸ் அணி எடுத்துள்ளது. ரூதர்ஃபோர்டு ஃபாஸ்ட் பவுலர் தான் என்றபோதிலும் கடந்த சீசனில் பேட்டிங்கிலும் அசத்தியுள்ளார்.