Asianet News TamilAsianet News Tamil

MI vs DC: டெல்லியை வீழ்த்தி ஆர்சிபியின் ரூட்டை க்ளியர் செய்தது MI..! பிளே ஆஃபில் ஆர்சிபி

டெல்லி கேபிடள்ஸ் அணியை  5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெற்றதால், ஆர்சிபி அணி பிளே ஆஃபிற்கு தகுதிபெற்றது.

Mumbai Indians beat Delhi capitals and so RCB qualifies play offs of ipl 2022
Author
Mumbai, First Published May 21, 2022, 11:42 PM IST

ஐபிஎல் 15வது சீசனில் மும்பை இந்தியன்ஸ் - டெல்லி கேபிடள்ஸ் இடையேயான போட்டி மும்பை வான்கடேவில் நடந்தது. பிளே ஆஃபிற்கு முன்னேற இந்த போட்டியில் வெற்றி கட்டாயத்தில் டெல்லி அணி களமிறங்கியது.  இந்த போட்டியில் டாஸ் வென்ற  மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோஹித் சர்மா ஃபீல்டிங்கை தேர்வு செய்தார். 

மும்பை இந்தியன்ஸ் அணி:

ரோஹித் சர்மா (கேப்டன்), இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), டிவால்ட் ப்ரெவிஸ், திலக் வர்மா, டேனியல் சாம்ஸ், டிம் டேவிட், ரமன் தீப் சிங், ரித்திக் ஷோகீன், பும்ரா, ரிலே மெரிடித், மயன்க் மார்கண்டே.

டெல்லி கேபிடள்ஸ் அணி:

டேவிட் வார்னர், பிரித்வி ஷா, சர்ஃபராஸ் கான், மிட்செல் மார்ஷ், ரிஷப் பண்ட் (கேப்டன், விக்கெட் கீப்பர்), ரோவ்மன் பவல், அக்ஸர் படேல், ஷர்துல் தாகூர், குல்தீப் யாதவ், அன்ரிக் நோர்க்யா, கலீல் அகமது.

முதலில் பேட்டிங் ஆடிய டெல்லி அணியின் தொடக்க வீரர் டேவிட் வார்னர் 3வது ஓவரில் 5 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். மிட்செல் மார்ஷ் ரன்னே அடிக்காமல் முதல் பந்திலேயே பும்ராவிடம் விக்கெட்டை பறிகொடுத்தார். பிரித்வி ஷாவும் 24 ரன்களில் ஆட்டமிழக்க, சர்ஃபராஸ் கானும் 10 ரன்னில் வெளியேறினார்.

அதன்பின்னர் ரிஷப் பண்ட்டும் ரோவ்மன் பவலும் பொறுப்புடனும், அதேவேளையில் அடித்தும் ஆடியதால் டெல்லி அணியின் ஸ்கோர் உயர்ந்தது. 5வது விக்கெட்டுக்கு பவலும் ரிஷப்பும் சேர்ந்து 75 ரன்களை சேர்த்தனர். ரிஷப் பண்ட் 39 ரன்களும், பவல் 43 ரன்களும் அடித்து ஆட்டமிழந்தனர். பின்வரிசையில் இறங்கிய அக்ஸர் படேல், 10 பந்தில் 19 ரன்கள் அடிக்க, 20 ஓவரில் 159 ரன்கள் அடித்தது.  பும்ரா அபாரமாக பந்துவீசி பிரித்வி ஷா, மிட்செல் மார்ஷ், ரோவ்மன் பவல் ஆகிய 3 முக்கியமான விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

160 ரன்கள் என்ற இலக்கை அடித்து மும்பை இந்தியன்ஸ் அணி 5   விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மும்பை அணி வெற்றி பெற்றதால் டெல்லி அணி பிளே ஆஃப் வாய்ப்பை இழந்தது. மும்பை வெற்றி பெற்றதால் ஆர்சிபியின் ரூட் க்ளியர் ஆனது. ஆர்சிபி அணி 4வது அணியாக பிளே ஆஃபிற்கு முன்னேறியது.

Follow Us:
Download App:
  • android
  • ios