மும்பை இந்தியன்ஸ் அணியின் தொடக்க வீரர்கள் ரோஹித் சர்மா மற்றும் இஷான் கிஷன் ஆகிய இருவரையும் முதல் ஓவரிலேயே வீழ்த்தினார் சிஎஸ்கே பவுலர் முகேஷ் சௌத்ரி. 

ஐபிஎல் 15வது சீசனின் இன்றைய போட்டியில் மும்பை இந்தியன்ஸும் சிஎஸ்கேவும் ஆடிவருகின்றன. இரு அணிகளுமே இந்த சீசனில் படுமோசமாக ஆடிவரும் நிலையில், இன்றைய போட்டியில் இரு அணிகளுமே வெற்றி வேட்கையுடன் களமிறங்கியுள்ளன.

மும்பை டி.ஒய்.பாட்டீல் மைதானத்தில் நடந்துவரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற சிஎஸ்கே கேப்டன் ரவீந்திர ஜடேஜா ஃபீல்டிங்கை தேர்வு செய்தார். சிஎஸ்கே அணி 2 மாற்றங்களுடனும், மும்பை இந்தியன்ஸ் அணி 3 மாற்றங்களுடனும் களமிறங்கியது.

சிஎஸ்கே அணி:

ருதுராஜ் கெய்க்வாட், ராபின் உத்தப்பா, மொயின் அலி, அம்பாதி ராயுடு, ஷிவம் துபே, தோனி, ரவீந்திர ஜடேஜா, ட்வைன் ப்ரிட்டோரியஸ், ட்வைன் பிராவோ, மஹீஷ் தீக்‌ஷனா, முகேஷ் சௌத்ரி.

மும்பை இந்தியன்ஸ் அணி:

இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), ரோஹித் சர்மா (கேப்டன்), டிவால்ட் பிரெவிஸ், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, கைரன் பொல்லார்டு, டேனியல் சாம்ஸ், ரித்திக் ஷோகீன், ரிலே மெரிடித், ஜெய்தேவ் உனாத்கத், ஜஸ்ப்ரித் பும்ரா.

முதலில் பேட்டிங்கை தொடங்கிய மும்பை இந்தியன்ஸ் அணியின் தொடக்க வீரர்கள் ரோஹித் சர்மா மற்றும் இஷான் கிஷன் ஆகிய இருவரையுமே முதல் ஓவரிலேயே டக் அவுட்டாக்கி அனுப்பினார் முகேஷ் சௌத்ரி. பேபி ஏபி என்றழைக்கப்படும் இளம் அதிரடி வீரர் டிவால்ட் ப்ரெவிஸை தனது அடுத்த ஓவரான இன்னிங்ஸின் 3வது ஓவரில் வீழ்த்தினார் முகேஷ் சௌத்ரி.

23 ரன்களுக்கே மும்பை இந்தியன்ஸ் அணி 3 விக்கெட்டுகளை இழந்துவிட்டது. சூர்யகுமார் யாதவ் அதிரடியாக அடித்து ஆடிவருகிறார்.