ஆஃப்கானிஸ்தான் ஸ்பின்னர் முஜீபுர் ரஹ்மானுக்கு கொரோனா தொற்று உறுதியானதால் அவர் குயின்ஸ்லாந்தில் உள்ள ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகிறார்.

ஐபிஎல்லில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காக ஆடிய ஆஃப்கானிஸ்தான் ஸ்பின்னர் முஜீபுர் ரஹ்மான், அடுத்ததாக பிக்பேஷ் லீக்கில் பிரிஸ்பேன் ஹீட் அணிக்காக ஆடுவதற்காக கடந்த வாரம் ஆஸ்திரேலியாவிற்கு சென்றார்.

வரும் 10ம் தேதி பிக்பேஷ் லீக் தொடங்கவுள்ள நிலையில், அதற்காக கடந்த வாரம் ஆஸ்திரேலியாவிற்கு சென்ற முஜீபுர் ரஹ்மான் குவாரண்டினில் இருந்த நிலையில், அவருக்கு கொரோனா பரிசோதனையில் பாசிட்டிவ் என ரிசல்ட் வந்தது. 

கொரோனா உறுதியானதையடுத்து குயின்ஸ்லாந்தில் உள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார் முஜீபுர் ரஹ்மான். இந்த தகவலை பிரிஸ்பேன் ஹீட் அணி நிர்வாகம் உறுதிப்படுத்திய நிலையில், முஜீபுர் ரஹ்மானின் உடல்நிலை கண்காணிக்கப்பட்டுவருகிறது.