இந்திய அணிக்கு கடந்த சில ஆண்டுகளாகவே மிடில் ஆர்டர் பிரச்னை இருந்துவருகிறது. குறிப்பாக நான்காம் வரிசையில் நீடித்துவந்த சிக்கலை தீர்க்கும் விதமாக இரண்டு ஆண்டுகாலம் தேடுதல் படலம் நடத்தப்பட்டது. 

ஷ்ரேயாஸ் ஐயர், மனீஷ் பாண்டே, ரஹானே, ரெய்னா ஆகியோர் அந்த வரிசையில் பரிசோதிக்கப்பட்டனர். ஒருவழியாக கடந்த ஆண்டு ராயுடுவை உறுதி செய்த இந்திய அணி நிர்வாகம், கடைசி நேரத்தில் உலக கோப்பை தொடரில் அவரை கழட்டிவிட்டது. 

விஜய் சங்கர் பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் என மூன்றிலுமே பங்களிப்பு செய்யக்கூடியவர் என்பதால் அவர் உலக கோப்பை அணியில் எடுக்கப்பட்டார். விஜய் சங்கர் 3டி பிளேயர் என்று கூறி அவரது தேர்வை தேர்வுக்குழு தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத் நியாயப்படுத்தினார். 

இதனால் அதிருப்தியடைந்த ராயுடு, உலக கோப்பையை பார்க்க 3டி கண்ணாடி ஆர்டர் செய்திருப்பதாக டுவீட் செய்து தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார். அதன்பின்னர் உலக கோப்பையின் இடையே இரண்டு முறை ராயுடுவை எடுப்பதற்கான வாய்ப்பு இருந்தும்கூட ராயுடு புறக்கணிக்கப்பட்டார். தவான் காயமடைந்த பிறகு, அவருக்கு பதிலாக ரிஷப் பண்ட்டும், காயத்தால் விலகிய விஜய் சங்கருக்கு பதிலாக மயன்க் அகர்வால் அணியில் எடுக்கப்பட்டார். மாற்று வீரர்களுக்கான பட்டியலில் இருந்த ராயுடுவை அணியில் எடுப்பதற்கு 2 முறை வாய்ப்பிருந்தும் எடுக்கப்படவில்லை. 

அணி தேர்வின் மீதான அதிருப்தியை வெளிப்படுத்தும் விதமாக நக்கலாக டுவீட் செய்ததால் தான் ராயுடு புறக்கணிக்கப்பட்டாரா என்று எம்.எஸ்.கே.பிரசாத்திடம் கேள்வி எழுப்பப்பட்டது. வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான அணியை அறிவித்த பின்னர் எம்.எஸ்.கே.பிரசாத்திடம் இந்த கேள்வி எழுப்பப்பட்டது.

றால், அது ஒரு அருமையான டுவீட். ராயுடுவின் டைமிங்கான டுவீட் என்னை மிகவும் கவர்ந்தது. அந்த டுவீட்டை உண்மையாகவே நான் மிகவும் ரசித்தேன். அதற்காகவெல்லாம் ராயுடுவை எடுக்காமல் இல்லை. அணியில் இடம் கிடைக்கவில்லை என்றதும் அவரது உணர்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். தேர்வாளர்களுக்கும் உணர்ச்சிகளெல்லாம் இருக்கும். நாங்கள் தேர்வு செய்யும் வீரர், இந்திய அணிக்காக சிறப்பாக ஆடினால் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைவோம் என்று எம்.எஸ்.கே.பிரசாத் தெரிவித்தார்.