Asianet News TamilAsianet News Tamil

மாத்தி மாத்தி எடுத்தீங்களே.. அதெல்லாம் என்ன கூத்துங்கனு கேட்டதுக்கு ஒரே போடா போட்ட தேர்வுக்குழு தலைவர்

தொடக்க வீரர் தவானுக்கு பதிலாக மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட்டை அணியில் எடுத்தது குறித்தும், பின்னர் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் விஜய் சங்கர் காயத்தால் விலகியதை அடுத்து மாற்று வீரர்கள் பட்டியலில் இருந்த ராயுடுவை எடுக்காமல் மயன்க் அகர்வாலை எடுத்தது ஏன்?

msk prasad explained about rishabh pant and mayank agarwal incusion in world cup squad
Author
India, First Published Jul 22, 2019, 5:24 PM IST

உலக கோப்பை அணி தேர்வு பெரும் சர்ச்சையான நிலையில், முக்கியமான சர்ச்சை குறித்து தேர்வுக்குழு தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத் விளக்கமளித்தார். 

வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்துக்கான டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் அணிகளை தேர்வுக்குழு தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத் நேற்று அறிவித்தார். அப்போது அவரிடம் உலக கோப்பை அணி தேர்வு குறித்து பல கேள்விகள் எழுப்பப்பட்டன. 

அதில் ஒரு கேள்வியாக, தொடக்க வீரர் தவானுக்கு பதிலாக மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட்டை அணியில் எடுத்தது குறித்தும், பின்னர் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் விஜய் சங்கர் காயத்தால் விலகியதை அடுத்து மாற்று வீரர்கள் பட்டியலில் இருந்த ராயுடுவை எடுக்காமல் மயன்க் அகர்வாலை எடுத்தது ஏன்? என்று கேள்வி எழுப்பப்பட்டது. 

msk prasad explained about rishabh pant and mayank agarwal incusion in world cup squad

அதற்கு பதிலளித்த எம்.எஸ்.கே.பிரசாத், ஷிகர் தவான் காயமடைந்த பிறகு தொடக்க வீரராக இறங்குவதற்கு கேஎல் ராகுல் அணியில் இருந்தார். அதனால் அவர் மாற்று தொடக்க வீரராக களமிறங்கிவிட்டார். ஆனால் அணியின் பேட்டிங் ஆர்டரில் ஒரு இடது கை பேட்ஸ்மேன் கூட இல்லை என்பதால் இடது கை பேட்ஸ்மேன் தேவை என்று அணி நிர்வாகம் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. எனவே ரிஷப் பண்ட்டை அணியில் எடுத்தோம் என்று எம்.எஸ்.கே.பிரசாத் தெரிவித்தார்.

விஜய் சங்கர் காயத்தால் விலகிய நிலையில், அவருக்கு பதிலாக தொடக்க வீரர் மயன்க் அகர்வாலை அணியில் எடுத்தது குறித்து விளக்கமளித்த பிரசாத், இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் பவுண்டரி லைனில் கேட்ச் பிடிக்க டைவ் அடிக்கும்போது ராகுல் கீழே விழுந்தார். அதன்பின்னர் அந்த போட்டியில் அவர் ஃபீல்டிங் செய்யவில்லை. எனவே அவரது உடற்தகுதி குறித்த அச்சமும் அணி நிர்வாகத்திற்கு இருந்தது. எனவே தான் விஜய் சங்கர் காயத்தால் விலகியதை அடுத்து மாற்று தொடக்க வீரர் ஒருவர் தேவை என்று அணி நிர்வாகத்திடமிருந்து எழுத்துப்பூர்வ கோரிக்கை வைக்கப்பட்டது. எனவே அணி நிர்வாகத்தின் கோரிக்கையை ஏற்று மயன்க் அகர்வாலை அணியில் எடுத்ததாக தெரிவித்தார். 
 

Follow Us:
Download App:
  • android
  • ios