தோனி டிராக்டரில் உழவு செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.  

இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் சீனியர் வீரருமான தோனி, கடந்த ஆண்டு இங்கிலாந்தில் நடந்த உலக கோப்பைக்கு பின்னர் இந்திய அணியில் ஆடவில்லை. உலக கோப்பையுடன் தோனி ஓய்வுபெற்று விடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஓய்வு அறிவிக்காத தோனி, அவரது கிரிக்கெட் எதிர்காலம் குறித்த விவாதம் வலுத்தபோதிலும், தொடர்ந்து மௌனம் காத்துவருகிறார். 

அவர் ஓராண்டாக எந்த விதமான கிரிக்கெட் போட்டிகளிலும் ஆடாத சூழலில், அவரது பெயர், பிசிசிஐ-யின் வீரர்கள் ஒப்பந்த பட்டியலில் இடம்பெறவில்லை. இந்நிலையில், டி20 உலக கோப்பையில் தோனி ஆடுவது குறித்தும், தோனியின் கிரிக்கெட் எதிர்காலம் குறித்தும் முன்னாள், இந்நாள் வீரர்கள் பலரும் கருத்து தெரிவித்துவருகின்றனர். 

தோனியை பற்றி அனைவருமே பேசிவரும் நிலையில், தொடர்ச்சியாக மௌனம் காத்துவரும் தோனி, ஊரடங்கு காலத்தில் விவசாயத்தில் இறங்கிவிட்டார். 

தோனியின் சொந்த ஊரான ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் தான் தோனி உள்ளார். ராஞ்சியில் உள்ள அவரது பண்ணை வீட்டில் தோனி இயற்கை விவசாயம் செய்வதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன் தோனி டிராக்டர் ஓட்டிய வீடியோ வைரலானது. 

இந்நிலையில், தற்போது தோனி விளைநிலத்தில் டிராக்டரால் உழவு ஓட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் செம வைரலாகிவருகிறது. தோனி இயற்கை விவசாயத்தில் இறங்கியிருப்பது வரவேற்புக்கும் பாராட்டுக்கும் உரிய விஷயம்.

View post on Instagram