Asianet News TamilAsianet News Tamil

தந்தையின் இறுதிச்சடங்கில் கலந்துகொள்ள பிசிசிஐ ஏற்பாடு செய்தும், கடமை தான் முக்கியம்னு மறுத்த சிராஜ்..!

தந்தையின் இறுதிச்சடங்கில் கலந்துகொள்ள ஏற்பாடு செய்து தருவதாக பிசிசிஐ கூறியும், நாட்டுக்காக ஆற்ற வேண்டிய கடமை தான் முக்கியம் என்று கூறி பிசிசிஐயின் சலுகையை நிராகரித்து ஆஸ்திரேலியாவிலேயே இருந்துவிட்டார் முகமது சிராஜ்.
 

mohammed siraj denies bcci offer to flying to india for his father funeral
Author
Australia, First Published Nov 22, 2020, 2:25 PM IST

இந்திய அணியின் இளம் ஃபாஸ்ட் பவுலர் முகமது சிராஜ். ஐபிஎல்லில் சன்ரைசர்ஸ் அணியில் அறிமுகமான சிராஜ், தற்போது ஆர்சிபி அணியில் ஆடிவருகிறார். இந்த சீசனில் கூட 9 போட்டிகளில் ஆடி 11 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆர்சிபி அணிக்காக சிறப்பான பங்காற்றினார்.

இந்திய அணிக்காக ஒரு ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் ஆடியுள்ள சிராஜ், ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்துக்கான இந்திய அணியில் இடம்பெற்று ஆஸ்திரேலியாவில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுவருகிறார். வரும் 27ம் தேதி முதல் ஒருநாள் போட்டி நடக்கவுள்ள நிலையில், இந்திய வீரர்களுடன் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுவருகிறார்.

இந்நிலையில், முகமது சிராஜின் தந்தை முகமது கோஸ்(53) நுரையீரல் பிரச்னையால் நேற்று(வெள்ளிக்கிழமை 20ம் தேதி) காலமானார். ஆட்டோ ஓட்டி கஷ்டப்பட்டு தன்னை ஆளாக்கிய தந்தையின் இறுதிச்சடங்கில் சிராஜால் கலந்துகொள்ள முடியவில்லை.

mohammed siraj denies bcci offer to flying to india for his father funeral

கொரோனா நெறிமுறைகளை பின்பற்றி இந்தியாவிற்கு வந்துவிட்டு மீண்டும் ஆஸ்திரேலியாவிற்கு திரும்புவது கடினம் என்றாலும், அதற்கான ஏற்பாடுகளை செய்து தருவதாக பிசிசிஐ கூறியுள்ளது. ஆனால் சிராஜ் தான் மறுத்துவிட்டார். இந்தியாவிற்கு சென்று தந்தையின் இறுதிச்சடங்கில் கலந்துகொண்டு திரும்ப ஏற்பாடு செய்து தருவதாக சிராஜிடம் பிசிசிஐ தெரிவித்துள்ளது. ஆனால் பிசிசிஐயின் ஆஃபரை மறுத்து, நாட்டுக்காக கடமையாற்றுவதே முக்கியம் என்று கூறிவிட்டார் என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது.
 

Follow Us:
Download App:
  • android
  • ios