IPL 2023: இதை மட்டும் செய்ங்க.. வெற்றி உங்கள் காலடியில்.! டெல்லி கேபிடள்ஸுக்கு முகமது கைஃப் முக்கியமான அட்வைஸ்

ஐபிஎல் 16வது சீசனில் படுமோசமாக ஆடி படுதோல்விகளை சந்தித்துவரும் நிலையில், அந்த அணிக்கு முகமது கைஃப் முக்கியமான அறிவுரை கூறியுள்ளார்.
 

mohammed kaif advice to delhi capitals to win consistently in coming matches of ipl 2023

ஐபிஎல் 16வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இந்த சீசனில் சிஎஸ்கே, ராஜஸ்தான் ராயல்ஸ், குஜராத் டைட்டன்ஸ், லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் ஆகிய 4 அணிகளும் அபாரமாக ஆடி வெற்றிகளை பெற்று புள்ளி பட்டியலில் ஆதிக்கம் செலுத்திவருகின்றன.

மும்பை இந்தியன்ஸ், ஆர்சிபி அணிகளும் அபாரமாக ஆடி வெற்றிகளை பெற்றுவருகின்றன. முதல் முறையாக கோப்பையை வெல்லும் முனைப்பில் களமிறங்கிய 3 அணிகளில் ஒன்றான டெல்லி கேபிடள்ஸ் அணி முதல் 5 போட்டிகளிலும் படுதோல்வி அடைந்தது.

இந்த சீசனில் டெல்லி கேபிடள்ஸ் கேப்டன் ரிஷப் பண்ட் ஆடாததால் டேவிட் வார்னர் கேப்டன்சி செய்கிறார். ரிஷப் பண்ட் ஆடாததால் அந்த அணியின் மிடில் ஆர்டர் பலவீனமடைந்துள்ளது. ஓபனிங்கில் பிரித்வி ஷாவும் சரியாக ஆடுவதில்லை. 6 போட்டிகளில் வெறும் 47 ரன்கள் மட்டுமே அடித்துள்ளார் பிரித்வி ஷா. மிட்செல் மார்ஷ், ஃபிலிப் சால்ட் ஆகியோரும் எதிர்பார்த்த அளவிற்கு சோபிக்கவில்லை.  சர்ஃபராஸ் கானை எடுத்தால் மிடில் ஆர்டர் பலப்படும். ஆனால் அவரை அணியில் எடுப்பதில்லை.

டெல்லி கேபிடள்ஸ் அணி தோற்பது கூட பிரச்னையில்லை. ஆனால் அந்த அணி தோற்கும் விதம் கண்டிப்பாக அணி நிர்வாகத்திற்கு கவலையளிக்கும். பெரிய வித்தியாசத்தில் படுதோல்விகளை அடைந்துவருகின்றன. 

இன்று டெல்லி கேபிடள்ஸ் அணி சன்ரைச்ரஸ் ஹைதராபாத்தை எதிர்கொண்டு ஆடுகிறது. இந்நிலையில், டெல்லி கேபிடள்ஸ் குறித்து பேசிய முகமது கைஃப்,   டெல்லி கேபிடள்ஸ் அணி ஆடும் லெவன் காம்பினேஷனில் அதிக கவனம் செலுத்த வேண்டும். வலுவான ஆடும் லெவனை தேர்வு செய்து ஆடவைக்க வேண்டும். வியூகங்களிலும் கவனம் செலுத்தியாக வேண்டும். டெல்லி கேபிடள்ஸ் அணீயில் நிறைய பிரச்னைகள் உள்ளன. தொடர் தோல்விகளால் அந்த அணி வீரர்கள் சோர்வடைந்துள்ளனர். எனவே டெல்லி கேபிடள்ஸ் இதுவரை அடைந்த தோல்விகளை மறந்துவிட்டு, இனிவரும் ஒவ்வொரு போட்டியிலும்  ஜெயிப்பதை மட்டுமே மனதில்வைத்து அபாரமாக ஆட வேண்டும் என்று முகமது கைஃப் தெரிவித்துள்ளார்.
 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios