இந்திய அணியின் இளம் ஃபாஸ்ட் பவுலர் முகமது சிராஜ். ஐபிஎல்லில் சன்ரைசர்ஸ் அணியில் அறிமுகமான சிராஜ், தற்போது ஆர்சிபி அணியில் ஆடிவருகிறார். இந்த சீசனில் கூட ஆர்சிபி அணிக்காக முக்கிய பங்காற்றினார்.

முகமது சிராஜின் தந்தை முகமது கோஸ், ஆட்டோ ஓட்டி கஷ்டப்பட்டு மகனை வளர்த்தார். குடும்ப கஷ்டத்தை மீறி தனது திறமையால் இந்திய அணிக்காக ஆடுமளவிற்கு வளர்ந்த முகமது சிராஜ், தற்போது ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் ஆடுவதற்காக ஆஸ்திரேலியாவில் உள்ளார்.

இந்நிலையில், சிராஜின் தந்தை முகமது கோஸ் காலமானார். தன்னை கஷ்டப்பட்டு வளர்த்த தந்தையின் மறைவுக்கு, ஆஸ்திரேலியாவில் இருக்கும் சிராஜாவால் வர முடியவில்லை.