Asianet News TamilAsianet News Tamil

Asia Cup: மருத்துவமனையில் ரிஸ்வான்.. பாகிஸ்தானுக்கு பாதிப்பு

பாகிஸ்தான் தொடக்க வீரர் முகமது  ரிஸ்வான் காலில் ஏற்பட்ட காயம் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
 

mohammad rizwan hospitalised after knee injury in india vs pakistan match in asia cup 2022
Author
First Published Sep 5, 2022, 5:14 PM IST

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இந்தியா, பாகிஸ்தான், ஆஃப்கானிஸ்தான், இலங்கை அணிகள் சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறிய நிலையில், சூப்பர் 4 சுற்று போட்டிகள் நடந்துவருகின்றன.

சூப்பர் 4 சுற்றின் முதல் போட்டியில் ஆஃப்கானிஸ்தானை வீழ்த்தி இலங்கை அணி அபார வெற்றி பெற்றது. துபாயில் நேற்று நடந்த இந்தியா - பாகிஸ்தான் இடையேயான முக்கியமான போட்டியில் பாகிஸ்தான் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இதையும் படிங்க- இதுதான் நீ பேட்டிங் ஆடுற லெட்சணமா..? டிரெஸிங் ரூமில் ரிஷப் பண்ட்டை விளாசிய கேப்டன் ரோஹித் சர்மா.. வைரல் வீடியோ

இந்த போட்டியின்போது முதல் இன்னிங்ஸில் விக்கெட் கீப்பிங் செய்தபோது பாகிஸ்தான் நட்சத்திர வீரர் முகமது ரிஸ்வானுக்கு காலில் காயம் ஏற்பட்டது. ஆனால் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் 2வது இன்னிங்ஸில் பேட்டிங் செய்தார். 

அதிலும் அபாரமாக பேட்டிங் ஆடி அரைசதம் அடித்த ரிஸ்வான் 51 பந்தில் 71 ரன்களை குவித்து பாகிஸ்தான் வெற்றிக்கு முக்கிய காரணமாக திகழ்ந்தார். 

இந்த போட்டி முடிந்தபின் ரிஸ்வான் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். அவரது காலில் எம்.ஆர்.ஐ ஸ்கேன் செய்யப்பட்டுள்ளது. ரிஸ்வானின் காயம் பாகிஸ்தானுக்கு பெரும் பின்னடைவாக அமையும். ரிஸ்வானால் அடுத்துவரும் போட்டிகளில் காயம் காரணமாக ஆடமுடியாமல் போனால், அது மிகப்பெரும் பாதிப்பாக பாகிஸ்தானுக்கு அமையும்.

இதையும் படிங்க - நான் டெஸ்ட் கேப்டன்சியிலிருந்து விலகிய பின் எனக்கு மெசேஜ் செய்த ஒரே நபர் தோனி தான்! அதான் சார் தோனி - கோலி

லீக் சுற்றில் இந்தியாவிற்கு எதிராக 43 ரன்களும், ஹாங்காங்கிற்கு எதிராக 78 ரன்களும் அடித்திருந்தார் ரிஸ்வான்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios