Asianet News TamilAsianet News Tamil

நான் டெஸ்ட் கேப்டன்சியிலிருந்து விலகிய பின் எனக்கு மெசேஜ் செய்த ஒரே நபர் தோனி தான்! அதான் சார் தோனி - கோலி

தான் டெஸ்ட் கேப்டன்சியிலிருந்து விலகியபின் தனக்கு மெசேஜ் செய்த ஒரே நபர் தோனி மட்டும்தான் என்று விராட் கோலி தெரிவித்துள்ளார்.
 

virat kohli explains the difference between ms dhoni and other cricketers
Author
First Published Sep 5, 2022, 1:38 PM IST

சமகால கிரிக்கெட்டின் தலைசிறந்த வீரர்களில் ஒருவர் விராட் கோலி. சர்வதேச கிரிக்கெட்டில் சதங்களையும் சாதனைகளையும் குவித்துவந்த விராட் கோலி, கடந்த 3 ஆண்டுகளாக பல இன்னல்களை சந்தித்துவருகிறார்.

சர்வதேச கிரிக்கெட்டில் 70 சதங்களை விளாசியுள்ள விராட் கோலி, கடந்த 3 ஆண்டுகளாக ஒரு சதம் கூட அடிக்கவில்லை. கடைசியாக 2019 நவம்பரில் சதமடித்தார். அதன்பின்னர் ஒரு சதம் கூட அடிக்கவில்லை. 

பேட்டிங்கில் சிறு வீழ்ச்சியை சந்தித்த விராட் கோலி, கேப்டன்சியிலும் வீழ்ச்சியை சந்தித்தார். கடந்த ஆண்டு நடந்த டி20 உலக கோப்பையுடன் டி20 கேப்டன்சியிலிருந்து விடைபெற்ற கோலி, அதைத்தொடர்ந்து ஒருநாள் மற்றும் டெஸ்ட் அணிகளின் கேப்டன்சியிலிருந்தும் திடீரென விலகினார்.

இதையும் படிங்க - Asia Cup: சூப்பர் 4 சுற்றில் பாகிஸ்தானிடம் தோல்வி.. ஃபைனலுக்கு இந்தியா முன்னேறுவது எப்படி..? இதோ ரூட்மேப்

கேப்டன்சியிலிருந்து விலகி, கேப்டன்சி அழுத்தத்திலிருந்து விடுபட்ட பின்னரும் அவரது பேட்டிங்கில் பெரிய முன்னேற்றம் இல்லை. இதையடுத்து, கோலியின் ஃபார்ம், வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஜிம்பாப்வே தொடர்களில் ஆடாதது என அவர் மீதான விமர்சனங்கள் வலுத்துக்கொண்டே வந்தன.

விராட் கோலிக்கு பேட்டிங் ஆலோசனைகள், அவர்  செய்யும் தவறு என்ன, அதிலிருந்து விடுபடுவது எப்படி என்றெல்லாம் முன்னாள் வீரர்கள் பலரும் அறிவுரைகளும் ஆலோசனைகளும் கூறிவந்தனர்.

இந்நிலையில், ஆசிய கோப்பையில் சிறப்பாக ஆடிவரும் விராட் கோலி, பாகிஸ்தானுக்கு எதிரான சூப்பர் 4 சுற்று போட்டியில்  மற்ற வீரர்கள் ஆட்டமிழந்தபோதிலும், நிலைத்து நின்று ஆடி அரைசதம் அடித்து 60 ரன்கள் அடித்து இந்திய அணி 181 ரன்கள் அடிக்க உதவினார். ஆனாலும் இந்திய அணி அந்த போட்டியில் தோற்றது. ஆனால் கோலியின் சிறப்பான பேட்டிங் இந்திய அணிக்கும் ரசிகர்களுக்கும் நிம்மதியளித்தது.

இதையும் படிங்க - நீ கோட்டை விட்டது கேட்ச்சை இல்லடா;மேட்ச்சை! அர்ஷ்தீப் சிங் மீது செம கடுப்பான கேப்டன் ரோஹித் சர்மா!வைரல் வீடியோ

அந்த போட்டிக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த விராட் கோலி, தன்னை பற்றி பேசுபவர்கள் குறித்து பேசினார். இதுகுறித்து பேசிய விராட் கோலி, நான் டெஸ்ட் கேப்டன்சியிலிருந்து விலகிய பின், என்னுடன் ஆடிய வீரர்களில் எனக்கு மெசேஜ் செய்த ஒரே நபர் தோனி மட்டும் தான். நிறைய பேருக்கு எனது மொபைல் எண் தெரியும். ஆனால் டிவியில் எனக்கு பல ஆலோசனைகளை வழங்குபவர்கள், நேரடியாக என்னிடம் கூறலாம். எனது ஆட்டத்தில் நான் மேம்பட வேண்டும் என்று விரும்பினால், அவர்களிடம் எனது மொபைல் எண் இருக்கிறது; நேரடியாக என்னிடம் கூறினால் கண்டிப்பாக நான் அதை பின்பற்றுவேன் என்றார் கோலி. 
 

Follow Us:
Download App:
  • android
  • ios