டி20 உலக கோப்பை படுதோல்வி எதிரொலி.. ஆஃப்கானிஸ்தான் அணியின் கேப்டன்சியிலிருந்து முகமது நபி விலகல்

டி20 உலக கோப்பை தொடரின் சூப்பர் 12 சுற்றில் ஒரு வெற்றியை கூட ஆஃப்கானிஸ்தான் அணி பெறாத நிலையில், அந்த அணியின் கேப்டன்சியிலிருந்து முகமது நபி விலகினார்.
 

mohammad nabi steps down as afghanistan captain after t20 world cup lose

டி20 உலக கோப்பையில் நல்ல பவுலிங் யூனிட்டுடன் ஆஸ்திரேலியாவிற்கு சென்ற அணிகளில் ஆஃப்கானிஸ்தானும் ஒன்று. வெஸ்ட் இண்டீஸ், இலங்கை மாதிரியான பெரிய அணிகளே நேரடியாக சூப்பர் 12 சுற்றுக்கு தகுதிபெறாமல் தகுதிப்போட்டிகளில் ஆடிய நிலையில், ஆஃப்கானிஸ்தான் நேரடியாக சூப்பர் 12 சுற்றில் ஆடியது.

டி20 உலக கோப்பையில் முகமது நபி கேப்டன்சியில் ஆடியது ஆஃப்கானிஸ்தான் அணி. சூப்பர் 12 சுற்றில் ஆஃப்கானிஸ்தான் அணி, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, இலங்கை ஆகிய பெரிய அணிகள் இடம்பெற்றிருந்த க்ரூப் 1ல் இடம்பெற்றிருந்தது. சூப்பர் 12 சுற்றில் ஆஃப்கானிஸ்தான் ஆடவேண்டிய 2 போட்டிகள் மழையால் பாதிக்கப்பட்டதால், அந்த 2 போட்டிகளுக்கும் தலா ஒரு புள்ளியை பெற்றது ஆஃப்கானிஸ்தான் அணி.

எக்காரணத்தை முன்னிட்டும் ஜடேஜாவை விட்டுவிடக்கூடாது! சிஎஸ்கே அணி நிர்வாகத்திடம் ஸ்ட்ரிக்ட்டா சொன்ன கேப்டன் தோனி

அதைத்தவிர ஆடிய மற்ற 3 போட்டிகளிலுமே தோல்வியை தழுவியது. இன்று ஆஸ்திரேலியாவிற்கு எதிரான கடைசி போட்டியில் 168 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய ஆஃப்கானிஸ்தான் அணி, ரஷீத் கானின் கடைசி நேர அதிரடியால் 164 ரன்களை குவித்தது. கடுமையாக போராடியும் இன்னும் 5 ரன்கள் அடிக்க முடியாமல் 4 ரன் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. 

சூப்பர் 12 சுற்றில் ஒரு வெற்றியாவது பெறும் முனைப்பில் ஆஸ்திரேலியாவை எதிர்கொண்ட ஆஃப்கானிஸ்தான் அணி அதிலும் தோற்று, ஒரு வெற்றியை கூட பெற முடியாத அணியாக உலக கோப்பையிலிருந்து வெளியேறியது. அந்த அணியிடமிருந்து இன்னும் சிறப்பான ஆட்டம் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கடும் ஏமாற்றமளித்தது ஆஃப்கானிஸ்தான் அணி.

இந்நிலையில், டி20 உலக கோப்பையில் ஒரு வெற்றியை கூட பெறமுடியாத விரக்தியிலும் அதிருப்தியிலும் அந்த அணியின் கேப்டன்சியிலிருந்து விலகினார் முகமது நபி. 37 வயது ஸ்பின் ஆல்ரவுண்டரான முகமது நபி ஆஃப்கானிஸ்தான் அணிக்காக பல ஆண்டுகளாக சிறப்பான பங்களிப்பை அளித்துவரும் வீரர்.  ஆஃப்கானிஸ்தான் அணிக்காக சர்வதேச கிரிக்கெட்டில் 133 ஒருநாள் மற்றும் 101 டி20 போட்டிகளில் ஆடியிருக்கிறார்.

விராட் கோலி பண்ணது கண்டிப்பா ஃபேக் ஃபீல்டிங்.. அது தப்பு தான்..! முன்னாள் இந்திய வீரர் அதிரடி

ஆஃப்கானிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் அஸ்கர் ஆஃப்கான் ஓய்வுக்கு பிறகு அந்த அணிக்கு சரியான கேப்டன் அமையவில்லை. குல்பாதின் நைப் கேப்டனாக அறிவிக்கப்பட்டார். பின்னர் அவர் நீக்கப்பட்டு ரஷீத் கான் நியமிக்கப்பட்டார். ரஷீத் கான் கேப்டன்சியிலிருந்து ஒதுங்கியதையடுத்து, முகமது நபி கேப்டனாக செயல்பட்டுவந்தார். இப்போது அவரும் ஆஃப்கான் அணியின் கேப்டன்சியிலிருந்து விலகியுள்ளார்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios