Asianet News TamilAsianet News Tamil

இப்போதைய வீரர்களில் பந்துவீச ரொம்ப கஷ்டமான பேட்ஸ்மேன் அவருதான்..! பாக்., சீனியர் பவுலர் ஓபன் டாக்

பாகிஸ்தான் அணியின் சீனியர் பவுலர் முகமது ஆமீர், தற்போதைய பேட்ஸ்மேன்களில் யாருக்கு பந்துவீசுவது கடினம் என்று தெரிவித்துள்ளார். 
 

mohammad amir picks toughest batsman to bowl in current era of cricket
Author
Pakistan, First Published Jun 21, 2020, 11:14 PM IST

பாகிஸ்தான் அணியின் சீனியர் பவுலர் முகமது ஆமீர், தற்போதைய பேட்ஸ்மேன்களில் யாருக்கு பந்துவீசுவது கடினம் என்று தெரிவித்துள்ளார். 

பாகிஸ்தான் அணி எல்லா காலக்கட்டத்திலும் சிறந்த ஃபாஸ்ட் பவுலர்களை பெற்றிருக்கிறது. வாசிம் அக்ரம், வக்கார் யூனிஸ், ஷோயப் அக்தர், முகமது ஆமீர், முகமது சமி, முகமது ஆசிஃப், வஹாப் ரியாஸ் என அந்தந்த காலக்கட்டத்தில் சிறந்த பவுலர்களை பெற்றிருந்த அணி பாகிஸ்தான் அணி. 

அந்தவகையில், அப்படியான சிறந்த ஃபாஸ்ட் பவுலர்களில் ஒருவர் முகமது ஆமிர். முகமது ஆமீர் பாகிஸ்தான் அணியின் சீனியர் நட்சத்திர பவுலர். அருமையான ஃபாஸ்ட் பவுலரான ஆமீர், 2010ம் ஆண்டு ஸ்பாட் ஃபிக்ஸிங் புகாரில் சிக்கி 5 ஆண்டு தடை பெற்றார். 5 ஆண்டு கால தடைக்கு பிறகு மீண்டும் பாகிஸ்தான் அணியில் கம்பேக் கொடுத்து ஆடிவருகிறார். இதுவரை 36 சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் ஆடியுள்ள முகமது ஆமீர் 119 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 61 ஒருநாள் போட்டிகளில் ஆடி 81 விக்கெட்டுகளையும் 42 டி20 போட்டிகளில் ஆடி 55 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். 
 
முகமது ஆமீர் vs விராட் கோலி இடையேயான கடும் போட்டி அனைவரும் அறிந்ததே. விராட் கோலியை அதிகமுறை ஆமீர் வீழ்த்தியிருக்கிறார். ஆனால், சமகால கிரிக்கெட்டில் எந்த பேட்ஸ்மேன், பந்துவீசுவதற்கு கடினம் என்று கேட்டால், ஆமீர் விராட் கோலியை தேர்வு செய்யவில்லை. மற்றொரு சிறந்த வீரரான ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித் தான் பந்துவீச கடினமான பேட்ஸ்மேன் என்று தெரிவித்துள்ளார்.  ஸ்டீவ் ஸ்மித்தும் தான் எதிர்கொண்டதிலேயே மிகவும் கடினமான பவுலர் முகமது ஆமீர் தான் என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

வித்தியாசமான பேட்டிங் ஸ்டைல் மற்றும் டெக்னிக்கை கொண்ட ஸ்டீவ் ஸ்மித், சமகால கிரிக்கெட்டின் சிறந்த வீரர்களில் ஒருவராக திகழ்ந்துவருகிறார். குறிப்பாக டெஸ்ட் கிரிக்கெட்டில் ஸ்மித், கோலியை விட சிறந்த வீரராக திகழ்வது குறிப்பிடத்தக்கது. 

Follow Us:
Download App:
  • android
  • ios