Asianet News TamilAsianet News Tamil

திடீரென ஓய்வு அறிவித்தது ஏன்..? முகமது ஆமீர் விளக்கம்

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து திடீரென ஓய்வு அறிவித்ததற்கான காரணம் என்னவென்பது குறித்து பாக்., ஃபாஸ்ட் பவுலர் முகமது ஆமீர் விளக்கமளித்துள்ளார்.
 

mohammad amir explains why he retired suddenly from international cricket
Author
Pakistan, First Published May 13, 2021, 2:48 PM IST

சர்வதேச கிரிக்கெட்டில் எல்லா காலக்கட்டத்திலும் மிகச்சிறந்த ஃபாஸ்ட் பவுலர்கள் பாகிஸ்தான் அணியில் இருந்துள்ளனர். வாசிம் அக்ரம், வக்கார் யூனிஸ், ஷோயப் அக்தர், முகமது ஆமீர், சமி, ஜுனைத் கான் என பல சிறந்த ஃபாஸ்ட் பவுலர்கள் பாகிஸ்தானை சேர்ந்தவர்கள்.

அப்படிப்பட்ட சிறந்த பாகிஸ்தான் ஃபாஸ்ட் பவுலர்களில் ஒருவர் முகமது ஆமீர். 2009ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் பாகிஸ்தான் அணியில் அறிமுகமான ஆமீர், 36 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 119 விக்கெட்டுகளையும், 61 ஒருநாள் போட்டிகளில் ஆடி 81 விக்கெட்டுகளையும், 50 டி20 போட்டிகளில் 59 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ள ஆமீர், டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து மட்டும் ஓய்வுபெற்றார்.

வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில்(டி20, ஒருநாள்) கவனம் செலுத்தும் விதமாக டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்றதாக ஆமீர் தெரிவித்தார். ஆனால் ஆமீர் சுயநலவாதி என்ற விமர்சனம் எழுந்தது. டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஒதுங்கிய ஆமீருக்கு ஒருநாள் மற்றும் டி20 அணிகளில் இடம் கொடுக்காமல் ஒதுக்கியது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்.

mohammad amir explains why he retired suddenly from international cricket

இதையடுத்து உடனடியாக அனைத்துவிதமான போட்டிகளிலிருந்தும் ஓய்வு அறிவித்தார் முகமது ஆமீர். மிகச்சிறந்த ஃபாஸ்ட் பவுலரான முகமது ஆமீர், 29 வயதிலேயே ஓய்வு அறிவித்தார். இது கிரிக்கெட் ரசிகர்களுக்கும் பேரதிர்ச்சியாகவே இருந்தது.

இந்நிலையில், அதுகுறித்து விளக்கமளித்த முகமது ஆமீர், நம் தாய்நாட்டுக்காக கிரிக்கெட் ஆடுவதிலிருந்து ஓய்வுபெறுவது மிகக்கடினமான முடிவு. எனது நண்பர்கள், எனக்கு நெருக்கமானவரக்ளுடன் பேசிவிட்டுத்தான் ஓய்வு முடிவை எடுத்தேன். அதற்கான காரணங்களை மீண்டும் நான் நோண்டினால் அசிங்கமாகிவிடும். எனக்கு மரியாதை மிக முக்கியம். எனக்கு கிடைக்க வேண்டிய மரியாதை கிடைக்கவில்லை. அதனால் தான் ஓய்வு அறிவித்தேன் என்று முகமாது ஆமீர் தெரிவித்துள்ளார்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios