Asianet News TamilAsianet News Tamil

ஓவர் தெனாவட்டில் திமிரு காட்டிய பென் ஸ்டோக்ஸ்.. மூக்கை உடைத்த முகமது அப்பாஸ்..! செம வீடியோ.. மிஸ் பண்ணிடாதீங்க

பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில், தெனாவட்டாக கிரீஸை விட்டு வெளியே நின்ற பென் ஸ்டோக்ஸை கிளீன் போல்டு செய்து மூக்கை உடைத்தார் முகமது அப்பாஸ்.
 

mohammad abbas punished ben stokes with clean bowled in first test video
Author
Manchester, First Published Aug 7, 2020, 3:11 PM IST

இங்கிலாந்து - பாகிஸ்தான் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் நடந்துவருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய பாகிஸ்தான் அணி, தொடக்க வீரர் ஷான் மசூத்தின் அபாரமான சதத்தால் முதல் இன்னிங்ஸில் 326 ரன்கள் அடித்தது. ஷான் மசூத் 156 ரன்களை குவித்தார். பாபர் அசாம் 69 ரன்களையும் ஷதாப் கான் 46 ரன்களையும் அடித்தனர். 

இதையடுத்து முதல் இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்கள் ரோரி பர்ன்ஸ் 4 ரன்களிலும் சிப்ளி 8 ரன்களிலும் ஆட்டமிழக்க, இங்கிலாந்து அணியின் மேட்ச் வின்னர் பென் ஸ்டோக்ஸ் ரன்னே அடிக்காமல் முகமது அப்பாஸின் பந்தில் கிளீன் போல்டாகி டக் அவுட்டாகி வெளியேறினார். கேப்டன் ஜோ ரூட்டும் 16 ரன்களில் ஆட்டமிழக்க, அந்த அணி 62 ரன்களுக்கே 4 விக்கெட்டுகளை இழந்துவிட்டது. ஓலி போப்பும் ஜோஸ் பட்லரும் இணைந்து, நேற்றைய 2வது நாள் ஆட்டத்தின் எஞ்சிய ஆட்டத்தை சிறப்பாக ஆடி முடித்தனர். இரண்டாம் நாள் ஆட்டமுடிவில் இங்கிலாந்து அணி 4 விக்கெட் இழப்பிற்கு 92 ரன்கள் அடித்துள்ளது. போப் 46 ரன்களுடனும் பட்லர் 15 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். 

mohammad abbas punished ben stokes with clean bowled in first test video

இந்த போட்டியில் பென் ஸ்டோக்ஸ் தனது தெனாவட்டாலும் எதிரணி பவுலரை குறைத்து மதிப்பிட்டதாலும், அதற்கான பலனை அனுபவித்தார். பென் ஸ்டோக்ஸ், 2019ல் உலக கோப்பையை இங்கிலாந்து அணிக்கு வென்று கொடுத்த பிறகு, அவர் மிகப்பெரிய மேட்ச் வின்னராக உருவெடுத்தார். அதன்பின்னர் ஆஷஸ் தொடரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக கடைசி விக்கெட்டுக்கு 70 ரன்களுக்கு மேல் குவித்து தனி ஒருவனாக இங்கிலாந்துக்கு திரில் வெற்றியை பெற்றுக்கொடுத்தார். அண்மையில் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக சிறப்பான இன்னிங்ஸின் மூலம் அணியின் வெற்றிக்கு காரணமாக திகழ்ந்தார்.

இவ்வாறு இங்கிலாந்து அணிக்காக தனி ஒருவனாக பல முக்கியமான போட்டிகளில் வெற்றிகளை பெற்றுக்கொடுத்து பெரிய மேட்ச்வின்னராக உருவெடுத்துள்ள பென் ஸ்டோக்ஸுக்கு அதற்கேற்ப தலைக்கணமும் அதிகரித்துவிட்டது போல.. பவுலர்கள் மீது நான் ஆதிக்கம் செலுத்துவதாக காட்டிக்கொள்வதற்காக பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட்டின் முதல் இன்னிங்ஸில் களத்திற்கு வந்ததுமே, கிரீஸை விட்டு வெளியே நன்றாக விலகி நின்றார். அவரது தெனாவட்டை தனது துல்லியமான பவுலிங்கின் மூலம் காலி செய்தார் முகமது அப்பாஸ். 

கிரீஸை விட்டு வெளியே நின்ற ஸ்டோக்ஸுக்கு ஸ்டம்புக்கு நேராக அருமையாக ஒரு டெலிவரியை வீசினார். கிரீஸை விட்டு விலகி நின்ற ஸ்டோக்ஸ், அந்த பந்தை ஆடுவதற்கு முன்பாகவே, பந்து அவரைக்கடந்து சென்று ஸ்டம்ப்பை தாக்கிவிட்டது. நல்ல வேகத்தில் துல்லியமாக வீசிய அப்பாஸின் பந்தில் மூக்குடைபட்டு, டக் அவுட்டாகி திரும்பினார் இங்கிலாந்தின் மேட்ச் வின்னர் பென் ஸ்டோக்ஸ்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios