ஆஸ்திரேலியாவில் நடந்துவரும் பிக்பேஷ் லீக் தொடரில் நேற்றைய போட்டியில் மிட்செல் மார்ஷ் தலைமையிலான பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணியும் ஷுப்மன் கில் தலைமையிலான பிரிஸ்பேன் ஹீட் அணியும் மோதின. 

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணி, 20 ஓவரில் 213 ரன்கள் அடித்தது. கேப்டன் மிட்செல் மார்ஷ் அதிரடியாக ஆடி 41 பந்தில் 93 ரன்களை குவித்தார். தொடக்க வீரர்கல் இங்கிலிஸும் லிவிங்ஸ்டனும் அதிரடியாக ஆடி நல்ல தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். இங்கிலிஸ் 14 பந்தில் 28 ரன்களும், லிவிங்ஸ்டன் 31 பந்தில் 39 ரன்களும் அடித்து ஆட்டமிழந்தனர். 

சாம் ஒயிட்மேன் வெறும் 4 ரன்கள் மட்டுமே அடித்தார். 10.3 ஓவரில் 89 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்திருந்தது பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணி. அதன்பின்னர் கேப்டன் மிட்செல் மார்ஷும் பான்கிராஃப்ட்டும் இணைந்து அதிரடியாக ஆடி ஸ்கோரை உயர்த்தினர். 14வது ஓவரிலிருந்து அதிரடியை ஆரம்பித்த மிட்செல் மார்ஷ், ஓவருக்கு குறைந்தது ஒரு சிக்ஸர் அடித்தார். பாட்டின்சன் வீசிய 16வது ஓவரில் 2 சிக்ஸர்களையும் ஒரு பவுண்டரியையும் விளாசினார். பின்னர் 19வது ஓவரில் 2 சிக்ஸர்களும், கடைசி ஓவரின் கடைசி 3 பந்தில் ஹாட்ரிக் சிக்ஸர்களும் விளாசினார் மிட்செல் மார்ஷ். மார்ஷ் 41 பந்தில் 3 பவுண்டரிகள் மற்றும் 8 சிக்ஸர்களுடன் 93 ரன்களை குவித்தார். 

பான்கிராஃப்ட் 41 ரன்கள் அடித்தார். 20 ஓவரின் முடிவில் பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணி 213 ரன்களை குவித்தது. 214 ரன்கள் என்ற இலக்குடன் ஆடிய பிரிஸ்பேன் ஹீட் அணியிலும், இந்த கடினமான இலக்கை விரட்டக்கூடிய திறன் பெற்ற வீரர்கள் இருந்தனர். கிறிஸ் லின், டாம் பாண்ட்டன் ஆகிய 2 அதிரடி வீரர்களை கொண்ட அணி அது. டாம் பாண்ட்டன் தனது பணியை செவ்வனே செய்தார். ஆனால் கிறிஸ் லின் மற்றும் மற்ற வீரர்கள் சரியாக ஆடவில்லை. பாண்ட்டன் 32 பந்தில் 55 ரன்களை விளாசி ஆட்டமிழந்தார். மற்ற வீரர்களில் ஒருவர் கூட பெரிய இன்னிங்ஸ் ஆடாமல், ஓரளவிற்கான பங்களிப்பே செய்தனர். அதனால் பிரிஸ்பேன் ஹீட் அணி 179 ரன்கள் மட்டுமே அடித்தது. 

இதையடுத்து 34 ரன்கள் வித்தியாசத்தில் பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணி அபார வெற்றி பெற்றது. மிட்செல் மார்ஷ் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.