Asianet News TamilAsianet News Tamil

துணிச்சலற்ற கம்மின்ஸ்.. உங்க பயிற்சியாளரை அவமதிச்சுட்டீங்க! லாங்கர் விவகாரத்தில் கம்மின்ஸை விளாசிய ஜான்சன்

ஆஸ்திரேலிய அணியின் தலைமை பயிற்சியாளர் பதவியை ஜஸ்டின் லாங்கர் ராஜினாமா செய்த விவகாரத்தில் அந்த அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸை மிகக்கடுமையாக விமர்சித்துள்ளார் மிட்செல் ஜான்சன்.
 

mitchell johnson slams australia test captain pat cummins for not extend his support to justin langer
Author
Australia, First Published Feb 6, 2022, 3:05 PM IST

2018ம் ஆண்டு தென்னாப்பிரிக்காவில் பந்தை சேதப்படுத்திய விவகாரம் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வரலாற்றில் கரும்புள்ளியாக அமைந்தது. அந்த பிரச்னையால் தலைமை பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து டேரன் லீமன் விலகிய பின்னர், ஆஸ்திரேலிய அணியின் தலைமை பயிற்சியாளர் பொறுப்பை ஏற்றார் ஜஸ்டின் லாங்கர்.

மிகவும் நெருக்கடியான நிலையில், ஆஸ்திரேலிய அணியின் பயிற்சியாளர் பொறுப்பை ஏற்ற ஜஸ்டின் லாங்கர்,   2 புதிய கேப்டன்களின் கீழ் ஆஸ்திரேலிய வெள்ளைப்பந்து மற்றும் டெஸ்ட் அணிகளை கட்டமைத்து அந்த அணிக்கு வெற்றிகளை பெற்றுக்கொடுத்தார். 

ஜஸ்டின் லாங்கர் பயிற்சியின் கீழ் ஆரோன் ஃபின்ச் தலைமையில் வெள்ளைப்பந்து அணிகளும், டிம் பெய்ன் தலைமையில் டெஸ்ட் அணியும் சிறப்பாக செயல்பட்டது. சொந்த மண்ணில் இந்தியாவுக்கு எதிராக 2 முறை டெஸ்ட் தொடரை இழந்தது ஆஸ்திரேலிய அணி. அதுமட்டும்தான் ஜஸ்டின் லாங்கரின் பயிற்சியில் ஆஸ்திரேலிய அணி வாங்கிய மரண அடி.

ஆனாலும் அந்த தோல்விகளிலிருந்து மீண்டெழுந்து, டி20 உலக கோப்பையை வென்ற ஆஸ்திரேலிய அணி, ஆஷஸ் தொடரில் சொந்த மண்ணில் 4-0 என இங்கிலாந்தை வீழ்த்தி ஆஷஸ் தொடரை வென்றது. 

ஜஸ்டின் லாங்கரின் பயிற்சியில் 2 மிகப்பெரிய தொடர்களை ஆஸ்திரேலிய அணி வென்ற நிலையில், அவரது பதவிக்காலம் முடிந்தபின்னர், நீண்டகாலத்திற்கு அவரது ஒப்பந்தம் நீட்டிக்கப்பட வேண்டும் என்ற அவர் விரும்பினார். ஆனால் கிரிக்கெட் ஆஸ்திரேலியா குறைந்த காலத்திற்கே நீட்டிக்க தீர்மானித்தது. அதனால் அதிருப்தியடைந்த ஜஸ்டின் லாங்கர், திடீரென பயிற்சியாளர் பதவியை ராஜினாமா செய்தார்.

mitchell johnson slams australia test captain pat cummins for not extend his support to justin langer

ஜஸ்டின் லாங்கர் ராஜினாமா விவகாரத்தில் ஆஸ்திரேலிய முன்னாள் ஜாம்பவான்கள் பலரும் அவருக்கு ஆதரவாகவே உள்ளனர். கிரிக்கெட் ஆஸ்திரேலியா இந்த விவகாரத்தை கையாண்ட விதம் குறித்து அதிருப்தி தெரிவித்திருந்தார் ரிக்கி பாண்டிங். மேத்யூ ஹைடனும் ஜஸ்டின் லாங்கருக்கு ஆதரவாக பேசியிருந்தார்.

இந்நிலையில், இந்த விவகாரத்தில் ஜஸ்டின் லாங்கருக்கு ஒரு கேப்டனாக பாட் கம்மின்ஸ் ஆதரவு அளிக்காததை கடுமையாக விமர்சித்துள்ளார் மிட்செல் ஜான்சன்.

இதுகுறித்து பேசிய மிட்செல் ஜான்சன், டெஸ்ட் அணி கேப்டனான பாட் கம்மின்ஸ், லாங்கரின் பதவிக்காலத்தை நீட்டிப்பதற்கு ஆதரவு தெரிவித்திருந்தால் லாங்கரின் பதவிக்காலம் நீட்டிப்பதற்கான அனைத்து வாய்ப்புகளும் இருந்திருக்கும். ஆனால் கம்மின்ஸ் அதை விரும்பவில்லை என்பது அப்பட்டமாக தெரிந்தது. கம்மின்ஸுக்கு அந்த பவர் இருந்தது. யார் பயிற்சியாளராக வேண்டும் என்று கூற கேப்டனுக்கு முழு உரிமை இருக்கிறது. ஆனால் தைரியமற்ற கம்மின்ஸ், அவரது பயிற்சியாளருக்கு அவமரியாதை செய்துவிட்டார் என்று மிட்செல் ஜான்சன் விமர்சித்துள்ளார்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios