ICC WTC ஃபைனல்: இந்திய அணியில் கேஎல் ராகுலுக்கு மாற்று வீரராக தேர்வாகும் யஷஸ்வி ஜெய்ஸ்வால்..?
ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கான இந்திய அணியில் கேஎல் ராகுலுக்கு மாற்று வீரராக யஷஸ்வி ஜெய்ஸ்வாலை எடுக்க வேண்டும் என்று இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வான் வலியுறுத்தியுள்ளார்.
ஐபிஎல் 16வது சீசன் சுவாரஸ்யமான கட்டத்தில் உள்ளது. லீக் சுற்று முடியவுள்ள நிலையில், ஒவ்வொரு போட்டியுமே நாக் அவுட் போட்டி போன்றது. சன்ரைசர்ஸ் மற்றும் டெல்லி கேபிடள்ஸை தவிர மற்ற அனைத்து அணிகளுமே பிளே ஆஃபிற்கான ரேஸில் இருப்பதால் ஐபிஎல் சூடுபிடித்துள்ளது.
இந்த சீசனில் திலக் வர்மா, யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரிங்கு சிங் ஆகிய இளம் வீரர்கள் அபாரமான இன்னிங்ஸ்களை ஆடி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளனர். திலக் வர்மா மிடில் ஓவர்கள் மற்றும் டெத் ஓவர்களில் அபாரமாக ஆடி அசத்திவருகிறார். ரிங்கு சிங் கடைசி ஓவரில் 5 சிக்ஸர்களை விளாசி அசாத்தியமான வெற்றியை கேகேஆருக்கு பெற்று கொடுத்து தன்னை ஒரு ஃபினிஷராக நிரூபித்ததுடன், அதன்பின்னரும் பல போட்டிகளில் கடைசி ஓவரில் அபாரமாக ஆடி த்ரில் வெற்றிகளை பெற்று கொடுத்து ஃபினிஷராக நிலைநிறுத்தி கொண்டுள்ளார்.
IPL 2023: முக்கியமான போட்டியில் செம கெத்தான MI vs GT பலப்பரீட்சை..! இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவன்
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் ஆடிவரும் யஷஸ்வி ஜெய்ஸ்வால், இந்த சீசனில் ஒரு சதம் உட்பட 12 போட்டிகளில் மொத்தமாக 575 ரன்களை குவித்து ஃபாஃப் டுப்ளெசிஸை விட ஒரு ரன் மட்டுமே குறைவாக உள்ளார். கேகேஆருக்கு எதிரான போட்டியில் 13 பந்தில் அரைசதம் அடித்து சாதனை படைத்த யஷஸ்வி ஜெய்ஸ்வால், 47 பந்தில் 98 ரன்களை குவித்து கடைசிவரை களத்தில் இருந்தாலும் சதமடிக்க முடியவில்லை. அவரது அதிரடியான பேட்டிங்கால் 14வது ஓவரிலேயே 150 ரன்கள் என்ற இலக்கை அடித்து ராஜஸ்தான் அணி அபார வெற்றி பெற்றது.
வெறும் 2 ரன்னில் ஐபிஎல்லில் 2வது சதத்தை அடிக்கும் வாய்ப்பை நழுவவிட்டார். இந்த சீசனில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் அபாரமாக ஆடி அனைவரையும் கவர்ந்ததுடன், இந்திய அணி தேர்வாலர்களை தன்னை புறக்கணிக்கமுடியாத அளவிற்கு ஆடிவருகிறார்.
அவரை ஒருநாள் உலக கோப்பைக்கான இந்திய அணியில் எடுக்க வேண்டும் என்று முன்னாள் வீரர்கள் பலரும் வலியுறுத்திவரும் நிலையில், ஒருபடி மேலே போய், ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் இருந்து கேஎல் ராகுலுக்கு மாற்று வீரராக எடுக்க வேண்டும் என்று இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வான் வலியுறுத்தியுள்ளார்.
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் வரும் 7ம் தேதி லண்டன் ஓவலில் தொடங்கும் ஃபைனலில் மோதும் நிலையில், இந்த போட்டியிலிருந்து காயம் காரணமாக விலகிவிட்டார் கேஎல் ராகுல். அதனால் ராகுலுக்கு மாற்று வீரராக ஜெய்ஸ்வாலை எடுக்க வேண்டும் என்று மைக்கேல் வான் கூறியுள்ளார்.
IPL 2023: நீ நல்ல ஃபினிஷர் ஆகணும்னா இதை மட்டும் செய்..! ரிங்கு சிங்கிற்கு தல தோனியின் தரமான அட்வைஸ்
இதுகுறித்து பேசிய மைக்கேல் வான், டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கான இந்திய அணியில் கேஎல் ராகுலுக்கு மாற்று வீரராக கண்டிப்பாக நான் யஷஸ்வி ஜெய்ஸ்வாலை எடுப்பேன். அந்தளவிற்கு ஜெய்ஸ்வால் மிகச்சிறந்த வீரர். அவர் சூப்பர் ஸ்டாராக வளர்வார் என்று மைக்கேல் வான் கூறியிருக்கிறார்.