ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரரும் சிஎஸ்கே அணியின் பேட்டிங் பயிற்சியாளருமான மைக் ஹசி, அச்சுறுத்தும் ஐபிஎல் லெவனை தேர்வு செய்துள்ளார். 

கொரோன அச்சுறுத்தலால் எந்தவிதமான கிரிக்கெட் போட்டிகளும் கடந்த மூன்றரை மாதங்களாக நடக்கவில்லை. ஐபிஎல் 13வது சீசன் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அக்டோபர் - நவம்பர் காலக்கட்டத்தில் ஐபிஎல்லை நடத்தும் திட்டத்தில் பிசிசிஐ இருக்கிறது. கிரிக்கெட் போட்டிகள் எதுவும் இல்லாததால் முன்னாள், இந்நாள் கிரிக்கெட் வீரர்கள் பலரும் தங்களது ஆல்டைம் உலக லெவன், ஆல்டைம் ஐபிஎல் லெவனை தேர்வு செய்துவருகின்றனர். 

அந்தவகையில், ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரரும் சிஎஸ்கே அணியின் முன்னாள் வீரரும் இப்போதைய பேட்டிங் பயிற்சியாளருமான மைக் ஹசி, அச்சுறுத்துலான ஐபிஎல் லெவன் வீரர்களை கொண்ட அணியை தேர்வு செய்துள்ளார்.

அச்சுறுத்துலான ஐபிஎல் லெவனின் தொடக்க வீரர்களாக ரோஹித் சர்மா மற்றும் டேவிட் வார்னர் ஆகிய இருவரையும் தேர்வு செய்துள்ளார் ஹசி. மூன்றாம் வரிசையில் விராட் கோலியையும் நான்காம் வரிசையில் டிவில்லியர்ஸையும் தேர்வு செய்த ஹசி, தோனியை விக்கெட் கீப்பராக தேர்வு செய்துள்ளார். இந்த அணிக்கு தோனியையே கேப்டனாகவும் தேர்வு செய்துள்ளார். 

அதிரடி ஆல்ரவுண்டர்களான ஹர்திக் பாண்டியா, ஆண்ட்ரே ரசல் ஆகிய இருவரையும் தேர்வு செய்த ஹசி, ரஷீத் கான் மற்றும் சாஹல் ஆகிய இருவரையும் ஸ்பின்னர்களாகவும் புவனேஷ்வர் குமார், பும்ரா ஆகிய இரண்டு ஃபாஸ்ட் பவுலர்களையும் தனது அச்சுறுத்தும் ஐபிஎல் லெவனில் தேர்வு செய்துள்ளார். கேஎல் ராகுலை 12வது வீரராக தேர்வு செய்துள்ளார்.

மைக் ஹசி தேர்வு செய்த அச்சுறுத்துலான ஐபிஎல் லெவன்:

ரோஹித் சர்மா, டேவிட் வார்னர், விராட் கோலி, டிவில்லியர்ஸ், தோனி(கேப்டன், விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, ஆண்ட்ரே ரசல், ரஷீத் கான், சாஹல், புவனேஷ்வர் குமார், பும்ரா.

12வது வீரர் - கேஎல் ராகுல்