3 ஒருநாள், 3 டி20 மற்றும் 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுவதற்காக இந்திய அணி ஆஸ்திரேலியாவிற்கு சென்றுள்ளது. இந்திய வீரர்கள் சிட்னியில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுவருகின்றனர். 

முதலில் ஒருநாள் தொடரும், பின்னர் டி20 தொடரும், கடைசியாக டெஸ்ட் தொடரும் நடக்கவுள்ளது. ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் முழுவதுமாக ஆடும் விராட் கோலி, முதல் டெஸ்ட் போட்டியில் மட்டும் ஆடிவிட்டு கடைசி 3 டெஸ்ட் போட்டிகளில் ஆடாமல் இந்தியா திரும்புகிறார். கோலி ஆடாதது மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.

கடந்த 2018-2019 ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் முதல் முறையாக ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரை வென்று வரலாற்று சாதனை படைத்த இந்திய அணியை, இந்த முறை டெஸ்ட் தொடரில் வீழ்த்த அந்த அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் அறிவுரை வழங்கியுள்ளார்.

இதுகுறித்து பேசிய மைக்கேல் கிளார்க், ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் இந்திய அணி சரியாக ஆடாமல் தோற்றால், டெஸ்ட் தொடரில் அது பெரிய பிரச்னையாக அமையும். அப்படி நடந்தால் டெஸ்ட் தொடரில் 4-0 என இந்திய அணியை வீழ்த்திவிடலாம் என்று மைக்கேல் கிளார்க் தெரிவித்துள்ளார்.