Asianet News TamilAsianet News Tamil

சிஎஸ்கேவிற்கு பலத்த அடி.. செம ஹேப்பியில் மும்பை இந்தியன்ஸ்

ஐபிஎல் 12வது சீசனின் இறுதிப்போட்டி மும்பை இந்தியன்ஸ் மற்றும் சிஎஸ்கே அணிகளுக்கு இடையே நடக்கிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.
 

mi won toss and elected to bat in ipl 2019 final
Author
India, First Published May 12, 2019, 7:29 PM IST

ஐபிஎல் 12வது சீசனின் இறுதிப்போட்டி மும்பை இந்தியன்ஸ் மற்றும் சிஎஸ்கே அணிகளுக்கு இடையே நடக்கிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

தலா 3 முறை கோப்பையை வென்றுள்ள இந்த 2 அணிகளுமே நான்காவது முறையாக கோப்பையை வெல்லும் முனைப்பில் உள்ளன. இந்த சீசனில் இதுவரை இரு அணிகளும் மோதிய 3 போட்டிகளிலுமே மும்பை இந்தியன்ஸ் அணி தான் வென்றது. இரு அணிகளுக்கும் இடையேயான போட்டி என்றாலே பெரும் எதிர்பார்ப்பு இருக்கும். அதிலும் இந்த இரண்டு அணிகளும் ஏற்கனவே மூன்றுமுறை இறுதி போட்டியில் மோதிய அணிகள் என்பதால் இந்த போட்டி மீதான எதிர்பார்ப்பு பன்மடங்கு எகிறியுள்ளது. 

சிஎஸ்கேவிற்கு எதிராக மும்பை இந்தியன்ஸ் அணி நல்ல ரெக்கார்டை வைத்துள்ளது. 2010, 2013, 2015 ஆகிய மூன்று சீசன்களிலும் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சிஎஸ்கே அணிகள் இறுதி போட்டியில் மோதியுள்ளன. இதில் 2010ம் ஆண்டு மட்டுமே சிஎஸ்கே வென்றது. அந்த போட்டியில் மும்பையின் கேப்டன் சச்சின். அதன்பின்னர் ரோஹித் கேப்டனான பிறகு இரு அணிகளும் மோதிய இரண்டு ஃபைனல்களிலுமே மும்பை அணிதான் வென்றது.

mi won toss and elected to bat in ipl 2019 final

மும்பை இந்தியன்ஸும் சிஎஸ்கேவும் இதற்கு முன்னர் 3 முறை இறுதி போட்டியில் நேருக்கு நேர் மோதியுள்ளன. மும்பை அணியும் சிஎஸ்கேவும் மோதிய 3 இறுதி போட்டிகளிலுமே முதல் பேட்டிங் ஆடிய அணிதான் வெற்றி பெற்றது. 2010 சீசனின் இறுதி போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய சிஎஸ்கே வென்று கோப்பையை கைப்பற்றியது. 2013, 2015 ஆகிய இரண்டு சீசன்களிலும் மும்பை அணி முதலில் பேட்டிங் ஆடியது; அந்த அணிதான் வெற்றி பெற்று கோப்பையையும் கைப்பற்றியது. 

அந்த வகையில் இன்றைய போட்டியில் டாஸ் வென்ற மும்பை கேப்டன் ரோஹித் சர்மா டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார். மும்பை இந்தியன்ஸ் அணி ஜெயந்த் யாதவுக்கு பதிலாக மிட்செல் மெக்லனகனை எடுத்துள்ளது. சிஎஸ்கே அணியில் மாற்றம் ஏதுமில்லை. 
 

Follow Us:
Download App:
  • android
  • ios